எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்...புது,பொலிவுடன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது.

Thursday, September 10, 2009

தக்காளி சூப்

தேவையான பொருட்கள்: தொகுதி 1 தக்காளி - 1/2 கிலோ வெங்காயம் - 1 இஞ்சி - 1/2 அங்குலத் துண்டு
தொகுதி 2 உப்பு - தேவையான அளவு சர்க்கரை- 2 டீஸ்பூன் மிளகு பொடி- ருசிக்கேற்ப செய்முறை; மைக்ரொவேவ் பாத்திரத்தில், தொகுதி 1 ல் கொடுக்கபட்டுள்ள பொருட்களுடன் 1/4 கப் தண்ணீர் சேர்த்து மூடி மைக்ரொ ஹையில் 7 நிமிடங்கள் வைக்கவும். நன்கு ஆறியதும் இஞ்சித் துண்டை வெளியெ எறிந்து விடவும். மீதமுள்ள பொருட்களை மிக்ஸியில் அரைத்து கொண்டு வேண்டிய அளவு தண்ணீர் சேர்த்து வடிகட்டவும். பிறகு ருசிக்கேற்ப தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கொள்ளவும். இதனுடன் தொகுதி 2 ல் கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து மூடாமல் மைக்ரோ ஹையில் 5 நிமிடங்கள் வைக்கவும். சூப் கிண்ணத்தில் விட்டு பொரித்த bread துண்டுகளுடன் சூடாக பரிமாரவும். பயனுள்ள குறிப்பு: சூப் கெட்டியாக வேண்டுமானால் சிறிது மக்காச் சோள மாவை கரைத்து சூடாக்கினால் கெட்டியாகி விடும். (கிடைக்கும் அளவு : 4 நபருக்கு.)

No comments:

Post a Comment