எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்...புது,பொலிவுடன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது.

Sunday, September 6, 2009

ஆபாச படங்களை காட்டி வைரசை பரவ செய்யும் வெப்சைட்டுகள்

கம்ப்யூட்டரில் வைரசை பரவச்செய்யும் 100 வெப்சைட்டுகளின் பட்டியலை, ஆஸ்திரேலிய நிறுவனம் வெளியிட்டுள்ளது.கம்ப்யூட்டரில் இன்டர்நெட்டின் பயன்பாடு நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இதில், “மால்வேர்’ என்ற சாப்ட்வேர் தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிலர் ஆபாசக் காட்சிகளை சில வெப்சைட்டுகளில் காட்டுகின்றனர்.



இந்த வெப்சைட்டைப் பயன்படுத்தினால், கம்ப்யூட்டரில் வைரஸ் பரவி பல ஆயிரம், பயனுள்ள வெப்சைட்டுகளை பாதிப்படையச் செய்யும் அபாயம் உள்ளது. கடந்த ஆறு மாதங்களில் “மால்வேர்’ சாப்ட்வேர் மூலம் 20 ஆயிரத்துக்கும் அதிகமான வெப்சைட்டுகள் பாதிப்படைந்துள்ளதாக ஆஸ்திரேலிய கம்ப்யூட்டர் வைரஸ் தடுப்பு நிறுவனமான “நார்டன் சிமென்டெக்’ தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நார்டன் சிமென்டெக் நிறுவன அதிகாரி நடாலி கானர் குறிப்பிடுகையில், ” மால்வேர் சாப்ட் வேர், சில விளையாட்டு வெப்சைட்டுகள் மூலமும் வைரசை பரவச் செய்கிறது. இந்த வைரஸ் பரவுவதால் சிலருடைய தனிப்பட்ட அந்தரங்க தகவல்கள் மற்றவரின் கையில் எளிதாகக் கிடைக்கவும் வாய்ப்பு உள்ளது. எனவே, ஆபத்துக்குரிய 100 வெப்சைட்டுகளின் பெயர்களை வெளியிட்டுள்ளோம். இந்த வெப்சைட்டுகளைப் பயன்படுத்தாமல் இருப்பதன் மூலம் வைரஸ் பரவுதல் உள்ளிட்ட பாதிப்புகளைத் தவிர்க்க முடியும்’ என்றார்.

No comments:

Post a Comment