எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்...புது,பொலிவுடன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது.

Tuesday, December 28, 2010

விண்டோஸ் எக்ஸ்பி- விஸ்டா சில ரகசியங்கள்

விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா இயக்கத் தொகுப்புகளைப் பயன்படுத்துவோருக்கு சில ரகசிய ட்யூனிங் டிப்ஸ் இங்கு தரப்படுகின்றன. இவை நம் இயக்க வேகத்தினை அதிகப்படுத்துவதுடன், நம் செயல்பாட்டிலும் சுவராஸ்யத்தை தரும். நேரம் மிச்சம், திறன் அதிகரிப்பு, விண்டோஸ் தோற்ற மேம்பாடு ஆகியவை இந்த டிப்ஸ்களின் நோக்கம். இவற்றால் உங்கள் கம்ப்யூட்டருக்கு எந்த கேடுதலும் ஏற்படாது என்றாலும், உங்கள் முக்கியமான பைல்களுக்கு பேக் அப் எடுத்து வைத்துக் கொண்டு இந்த டிப்ஸ்களை இயக்கிப் பார்க்கவும். இந்த டிப்ஸ்களில் கண்ட்ரோல் பேனல் குறிக்கும் குறிப்புகள், உங்கள் கம்ப்யூட்டரில் கண்ட்ரோல் பேனல் கிளாசிக் வியூவில் இருப்பதாக எடுத்துக் கொண்டு தரப்படுகின்றன. ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து, கண்ட்ரோல் பேனல் சென்று, இடது மேலாக உள்ள ஒரு லிங்க்கில் கிளிக் செய்தால், கிளாசிக் வியூவிற்கு மாறிக் கொள்ளலாம். 1. டாஸ்க் பார் ஐட்டம் அனைத்தையும் மொத்தமாக மூட (எக்ஸ்பி): டாஸ்க்பாரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஐட்டங்களையும், போல்டர்களையும் வைத்திருக் கிறீர்களா? இவை அனைத்தையும் மொத்தமாக ஒரே கிளிக்கில் மூடலாம். கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, ஒவ்வொரு ஐட்டமாக, டபுள் கிளிக் செய்திடவும். பின்னர், ஏதேனும் ஒன்றில் ரைட் கிளிக் செய்து, எழுந்து வரும் மெனுவில், குளோஸ் குரூப் (Close Group) என்பதில் கிளிக் செய்திடவும். 2. சிஸ்டம் ரெஸ்டோர் இடத்தைப் பெற (எக்ஸ்பி): உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைவாக உள்ளது என்ற எச்சரிக்கைச் செய்தி வருகிறதா? எந்த ட்ரைவ் சென்று, எப்படிப்பட்ட பைல்களை நீக்கி இடம் மீட்பது என்று குழப்பமா? சிஸ்டம் ரெஸ்டோர் வசதிக்கென உள்ள இடத்தைக் குறைத்து, உங்கள் ஹார்ட் டிஸ்க் இடப் பிரச்னையைத் தற்காலிகமாக சமாளிக்கலாம். ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல் சென்று, சிஸ்டம் ஐகானில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் ரெஸ்டோர் டேப்பில் கிளிக் செய்திடவும். அதில் உள்ள ஸ்லைடரைப் பயன்படுத்தி, எவ்வளவு ஹார்ட் டிஸ்க் இடத்தை மீட்கலாம் என்று பார்க்கவும். அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கில் உள்ள பைல்களுக்குப் பேக் அப் எடுக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால், சிஸ்டம் ரெஸ்டோர் உங்களுக்குத் தேவை இல்லையே! எனவே இந்த வசதியை மொத்தமாக மூடிவிடலாம். இதற்கென ஒதுக்கப்பட்ட மொத்த இடமும் மிச்சமாகும். 3. டாஸ்க் பாரில் வெப் ஷார்ட்கட் (விஸ்டா): இணைய தளங்களை வேகமாகத் திறக்க, டாஸ்க்பாரில் உள்ள காலி இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். எழுந்து வரும் மெனுவில் Toolbars என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதில் உள்ள அட்ரஸ் ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். இங்கு உங்கள் இணைய தள முகவரியினை டைப் செய்திடவும். விண்டோஸ் இப்போது அந்த இணைய தளத்தினை, உங்கள் பிரவுசரைத் திறந்து இயக்கிக் காட்டும். 4. ரீசைக்கிள் பின்னைத் தாண்ட: அழிக்கப்படும் பைல்கள் ரீசைக்கிள் பின்னில் சென்று, அங்கு தொடர்ந்து இடத்தைக் கொண்டிருக்கும். இதனால் ஹார்ட் டிஸ்க் இடம் குறையலாம். எனவே ஒரு பைல் அறவே நீக்கப்பட வேண்டும். அது ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லக் கூடாது என எண்ணினால், ஷிப்ட் அழுத்தி டெலீட் கீயை அழுத்தி, அந்த பைலை முற்றிலுமாக நீக்கவும். 5. கம்ப்யூட்டரை யார் ஷட் டவுண் செய்வது? (எக்ஸ்பி): உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் உள்ள உங்களின் பெர்சனல் கம்ப்யூட்டரை, உங்களைத் தவிர மற்றவர்கள் ஷட் டவுண் செய்வதனைத் தடுக்க, ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல் சென்று, Administrative Tools செல்லவும். இங்கு Local Policies என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். பின்னர் Security Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வலது புறம், ‘Shutdown: allow system to be shut down without having to log on’ என்று இருக்கும் இடம் சென்று அதில் டபுள் கிளிக் செய்திடவும். அதன் பின்னர் Disabled என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 6. டிஸ்க் ட்ரைவ் மூலம் நேரத்தை மிச்சப்படுத்த (எக்ஸ்பி): உங்களுடைய சிடி அல்லது டிவிடி ட்ரைவிற்கான ஐகானை குயிக் லாஞ்ச் பாரில் வைக்கவும். இதற்கு மை கம்ப்யூட்டர் சென்று, சிடி/டிவிடி ஐகான இழுத்து வந்து, டாஸ்க்பாரில் குயிக் லாஞ்ச் ஏரியாவில் விடவும். இதன் மூலம், சிடியில் எழுதப்படக் காத்திருக்கும் பைல்களை, இந்த குயிக்லாஞ்ச் பாரில் உள்ள ட்ரைவ் ஐகானைக் கிளிக் செய்து பார்க்கலாம். ட்ரைவ் ட்ரேயினைத் திறக்கவும் செய்திடலாம். இதே போல எந்த ஒரு பைலுக்கும், போல்டருக்கும் ஷார்ட் கட் ஐகான்களை, குயிக் லாஞ்ச் பாரில் வைத்து இயக்கலாம். 7. எர்ரர் ரிப்போர்ட் நிறுத்த (எக்ஸ்பி): ஏதாவது புரோகிராம் கிராஷ் ஆகி, அதனை வலுக்கட்டாயமாக மூடிடுகையில், விண்டோஸ் இதற்கான ரிப்போர்ட்டைத் தயார் செய்து அனுப்பவா என்ற பிழைச் செய்தியினைக் காட்டும். இந்த பிழைச் செய்தியினைக் காட்டாமல் இருக்கும்படி விண்டோஸ் எக்ஸ்பி இயக்கத்தினை அமைக்கலாம். ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல், சிஸ்டம் எனச் செல்லவும். அங்கு கீழாக உள்ள எர்ரர் ரிப்போர்டிங் பட்டனில் (Error Reporting) கிளிக் செய்திடவும். இங்கு இந்த பிழைச் செய்தி தோன்றுவதனை நிறுத்தவும், மீண்டும் இயக்கவும் செய்திடலாம். 8.கீ போர்ட் ஷார்ட்கட் கீகள் (விஸ்டா): பொதுவான சில இயக்கங்களை வேகப்படுத்தும் வகையில் விஸ்டா இயக்கம் பல ஷார்ட்கட்கீ தொகுப்புகளைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, விண்டோஸ் கீயினை அழுத்தியவாறே, ஸ்பேஸ் பார் தட்டினால், பின்னணியில் இருக்கும் ஸைட்பார், முன்னதாகக் கொண்டு வரப்படும். விண்டோஸ் கீயுடன் ‘T’ கீயை அழுத்தினால், டாஸ்க் பார் ஐட்டங்கள் ஒவ்வொன்றாகச் செல்லலாம். குயிக் லாஞ்ச் பாரில் உள்ள புரோகிராம்களை இயக்க, விண்டோஸ் கீயுடன், குயிக் லாஞ்ச் பாரில், திறக்கப்பட வேண்டிய புரோகிராம் எந்த இடத்தில் உள்ளதோ (1,2,3,4.. என) அந்த எண்ணை அழுத்தினால் போதும். 9. கூடுதல் கடிகாரம் (விஸ்டா): பன்னாடுகளின் அப்போதைய நேரத்தினை எப்போதும் அறிந்து கொள்ள விருப்பமா? நோட்டிபிகேஷன் ஏரியாவில் உள்ள கடிகாரத்தின் மீது ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் Adjust Date/Time’ என்பதனைத் தேர்ந்தெடுக் கவும். அடுத்து Additional Clocks என்பதில் கிளிக் செய்திடவும். இனி, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கடிகாரங்களைக் காட்டுவதற்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு கடிகாரத்திற்குமான நேர மண்டலத்தை அமைத்துப் பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இனி திரையில், உங்களுக்குப் பிரியமானவர்கள் வசிக்கும் நாட்டின் கடிகாரம், அந்த நாட்டின் நேரத்தைக் காட்டியபடி இயங்கிக் கொண்டிருக்கும். 10. ஹெல்த் ரிப்போர்ட் பெற (விஸ்டா): கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் மற்றும் பிற சாதனங்கள் குறித்த ஹெல்த் ரிப்போர்ட்டினைப் பெறும் வசதியினை விஸ்டா கொண்டுள்ளது. இதன் மூலம் நம் ஹார்ட்வேர் சாதனங்களின் தன்மையை அறிந்து கொள்ளலாம். ரிப்போர்ட் ஜெனரேட்டர் என்ற வசதியின் மூலம் இதனைப் பெறலாம். ஸ்டார்ட் கிளிக் செய்து, performance and information என டைப் செய்து, என்டர் தட்டவும். இங்கு இடது புறமாக உள்ள ‘Advanced tools’ என்பதில் கிளிக் செய்து, ‘Generate a system health report’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். சிறிது நேரம் கழித்து, உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் வேர் குறித்த ஹெல்த் ரிப்போர்ட் உங்களுக்கு பைலாகக் கிடைக்கும்.

Saturday, December 25, 2010

தினேஷ் பில்லா

தினேஷ் பில்லா - எங்கள் TN6 -இல் அனைவருக்கும் அருமையான நண்பர்.... பில்லா என்றதும் பில்லா-அஜித் மாதிரி இருப்பார் என்று எதிர் பார்காதிர்கள், ப்ருசிலி மாதிரி ஒரு கெட் அப்-ல தான் வருவர்... இவர் TN6 -இல் ஒரு பூனை போல தான் வளம் வருவர்... வருவதும் தெரியாது போவதும் தெரியாது... அனால் பாசெபூக்(FaceBook)-இல் இவர் வந்தால் தெரியாமல் இருக்காது, அவளவு அலும்பும் அங்கே தான் செய்வார்... இவரது வித விதமான புகைப்படங்களை facebook -இல் நிறைய காணலாம்... எங்கே இருந்து தான் இப்படியோசிப்பாரோ தெரியல... அவ்ளோ கெட் அப்-ல புகைப்படங்கள் போட்டு இருக்கார்... கொஞ்சம் புகைப்படங்கள்-ல ஆர்வம் அதிகமோ!!!

மலர் விழி

மலர் விழி - இவள் பெயரை போலவே பூக்களை போன்ற மனதையும், அனைவரையும் கவரும் கண்களையும் உடையவள். மிகவும் குழந்தை போன்ற பேசும் இவளது குணமே, இவளின் தனித்துவம்.... வருடம் வருடம் வளர்ந்தும், இன்னும் குழந்தையாகவே இருக்கும் ஒரு அதிசய பிறவி... அனால் இப்பொழுதெல்லாம் ஒரு மினி கேமர்-ராக(Gamer) வளர்ந்து வருகிறார்.... இவருக்கு பயபடாதவர்கள் இப்பொழுது யாரும் இல்லை... பசு தோல் போர்த்திய புலியாக வளம் வருகிறார்....

Tuesday, December 14, 2010

கணினியை பராமரிக்க எளிய வழிமுறைகள்

இயந்திர உறுப்புகளை Hard ware என்றும் அதனை இயக்க வைக்கும் புறொக்கிறாம்களை (மென்பொருள்களை) Soft Ware என்றும் அழைப்பர். ஒபறேற்ரிங் சிஸ்ரம் (மென்பொருள்) குழப்பம் அடைய நேரிட்டால் கணினி வேலை செய்ய மறுக்கின்றது. கணினியில் Hard ware (கடுமயான உறுப்பு) இலகுவில் பழுதடைவதில்லை. அவற்றின் தரத்தைப் பொறுத்து நீடித்து உழைக்கக் கூடியது. ஆனால் அவையும் சூழ்நிலை காரணமாக பழுதடைய வாய்ப்புகள் உள்ளன. Soft ware என அழைக்கப் பெறும் புறொக்கிறாம்கள் (மென்பொருள்கள்) மிக இலகுவில் குழம்பி விடுகின்றது. அவறில் உள்ள சிறு பிழைகளை கணினியே சீர் செய்யக்கூடிய வசதிகள் ஒபறேற்ரிங் சிஸ்ரம் வழங்குகின்றது. அதற்கான வழிமுறைகள் இங்கே தரப்பெற்றுள்ளன. நாம் ஒரு பொருளை உரிய முறையில் பராமரிக்காது விட்டால் அவை செயலிழந்து பயனற்றதாகி விடுகின்றது. கணிணி அதற்கு விதிவிலக்கல்ல. எல்லாமே கணினி மயம் ஆகிவிட்ட இக்காலத்தில் கணினி பழுதடைந்து விட்டால் பல நஷ்டங்களையும், மன வேதனைகளையும் ஏற்படுத்தி விடுகின்றது. ஒரு கணினியின் முதல் எதிரி அதனை பாவிக்கும் நாங்கள்தான். நாம் செய்ய வேண்டிய எளிய பராமரிப்பு வேலைகளை செய்யாமல் விடுவதும், தெளிவின்றி தேவைப்படாத சில மென்பொருளை (install) உட்புகுத்துவதும், அதனை ஒவ்வாத (புகை, தூசு, அதிக வெப்பம், அதிக குளிர்) இடத்தில் வைப்பதும் தான் அதற்கு காரணம். சில இணையத் தளங்களில் இலவசமாக கிடைக்கும் சில மென்பொருள்களை (programs) உங்கள் கணினியில் (install) உட்புகுத்தியதும்; அவை உங்களின் முக்கியமான இரகசியங்களை வேவு பார்த்து உங்களுக்கு தெரியாமலே உரியவர்களுக்கு அனுப்பி விடுகின்றது. அத்துடன் சில மென்பொருகள் உங்கள் கணினிக்கு நோய் வரக்கூடிய வைரஸ்சுகளை உட்புகுத்தி கணினியை செயலிளக்கச் செய்கிறது. எமக்கு அறிமுகம் இல்லாத இடத்தில் இருந்து கிடைக்கும் ஈ-மெயில் கூட வைரசை பரப்பும் ஒரு காவியாக இருக்கலாம். அதனால் சில வேளைகளில் நீங்கள் சேமித்து வைத்த முக்கிய குறிப்புகளை இழக்கவும் நேரிடலாம். அவற்றை கண்டுபிடித்து அதனைச் செயலிழக்கச் செவதற்கான வழிமுறைகளைக் கைப்பிடிப்பது அவசியமாகும். நம்பிக்கையானவர்களிடம் இருந்து வரும் ஈ-மெயிகளை மாத்திரம் திறந்து பாருங்கள். வைரஸ் இல்லாத கணினிகளில் பிரதிசெய்த கோப்புகளை மாத்திரம் உங்கள் கணினியில் திறந்து பாருங்கள். இப்படிச் செய்வதன் மூலமும் நோய் பரவாமல் தடுக்கலாம். கணினிகளை மாதம் ஒரு முறையாவது ஸ்கேன் செய்யுங்கள். கணினியில் பதியப்பெற்றிருக்கும் ஒப்றேற்றிங் சிஸ்ரம்; கணினி தன்னைத் தானே தன்னிச்சையாக சரி செய்யக்கூடிய மென்பொருளை (programs) கொண்டுள்ளது. ஆனால் அவை தானாக இயங்க மாட்டாது. அவற்றை தேவைக்கேற்ப நாமே இயக்கிக் கொள்ளல் வேண்டும். அப்படி உள்ள ஒரு முறைதான் ஸ்கனிங் செய்தல். எப்படிச் செய்வது? உங்கள் கணினியில் My computer என்ற பகுதியை திறவுங்கள். அதில் உங்கள் ஹாட் டிஸ்க் (C:) என காட்டப்பெற்றிருக்கும். அதில் உங்கள் மவுசின் அம்புக்குறியை பதிய வைத்து (Right Click) மௌசின் இரண்டாவது பொத்தானை அழுத்துங்கள். அப்போது ஒரு மெனு தோன்றும். அதில் கடைசியாக உள்ள Properties என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள். அப்போது ஒரு விண்டோ திறபடும். அதில் General, Tools, Hardware, Sharing, Quota என்னும் ரப்ஸும் கீழே Disk Clanup என்ற பொத்தானும் இருக்கும். அவற்றுள் Tools என்ற ரப்ஸை கிளிக் செய்யுங்கள். அங்கே Check Now, Defragment Now, Backup Now என மூன்று பொத்தான்கள் காணப்படும். அவற்றுள் Check Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணினியை ஸ்கான் செயலாம். Defragment Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணினியின் ஹாட் டிக்கை ஒழுங்கு படுத்தலாம். Backup Now எனபது பாதுகாப்புக் கருதி பிரதி செய்ய பாவிக்கலாம். Check Now என்ற பொத்தானை அழுத்தியதும் சிறிய ஒரு விண்டோ திறபடும். அதில் Automatically fix files system errors எனவும், Scan for and attempt recovery of bad sectors எனவும் இரு பெட்டிகள் இருக்கும். அவை இரண்டையும் கிளிக் செய்வதன் மூலம் சரி போடுங்கள். பின் Start என்ற பொத்தானை அழுத்துங்கள். ஸ்கன்னிங் உடனே ஆரப்ப மாகும். சில ஒப்றேற்றிங் சிஸ்ரம் கணினி திரும்ப ஆரம்பிக்கும் போதுதான் ஆரம்பமாகும். அதற்கும் உங்கள் அனுமதி கேட்கும். அதற்கும் Yes பொத்தானை அழுத்தவும். இப்போது கணினியில் பதியப்பெற்ற எல்லா கோப்புகளும் ஸ்கான் செய்யப்பெற்று அவற்றில் குழப்பம் இருந்தால் தன்னிச்சையாக அவை திருத்தப்படும். அத்துடன் நாம் நிரந்தரமாக சேமித்து வைப்பதற்காகப் பாவிக்கப்பெறும் ஹாட்டிஸ்க்கில் உள்ள சிறு பகுதிகளிள் (Sectors) பழுதடைந்து இருந்தால் அவற்றில் இருக்கும் பதிவுகளை வேறு பகுதிக்கு மாற்றி கணினியை சீராக இயங்கக் கூடியதாக அமைக்கின்றது. கணினி ஸ்கான் செய்வதற்கு அதில் பதிந்து வைத்துள்ள பைல்களின் அளவையும், ஹாட்டிஸ்கின் அளவையும் பொறுத்து நேரம் எடுத்துக்கொள்ளும்.

Tuesday, November 30, 2010

பாதுகாப்பான கடவுச்சொல் எவ்வாறு அமைக்கலாம்?

இப்போதெல்லாம் பார்த்தால் அதிகமானோர் சட்டைப் பையில் பணம் இருக்குதோ இல்லையோ பல பல கிரடிட் அட்டைகள் வைத்துருப்பார்கள் அல்லது கடைசி ஒரு வங்கியின் ATM அட்டையாவது இருக்கும். ஆனால் இவற்றையெல்லாம் பாதுகாப்பாக பயன்படுத்துவதே இன்று பெரும் சவாலாக உள்ளது. இணைய மூலம் பொருட்கள் வாங்குவது (online shopping) மற்றும் இணைய வங்கிச்சேவை (net banking) என புதிய தொழிநுட்ப்ப வசதிகளோடு நாம் வாழ வேண்டிய கட்டாயச் சூழல் இது. ஆனால் இவற்றையெல்லாம் கையாழ்வதட்க்கு மின்னஞ்சல் ஒன்று அவசியம் மின்னஞ்சல் என்று வந்துவிட்டால் அதன் கடவுச் சொல் பாதுகாப்பானதா? என்பது மிக முக்கியம் இதற்க்கு முன்னர் நமது கணனி பாதுகாப்பானதா? என்பது மிக மிக முக்கியம், இல்லையென்றால் எல்லாம் அதோ கெதிதான் உழைப்பவன் யாரோ சும்மா உட்கார்ந்து சாப்பிடுபவன் யாரோ என்று நம் கதை வராமல் பார்ப்பது நம் கையில்த்தான் உள்ளது. சரி பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம் என்று பார்ப்போம்! நமது கடவுச்சொல் திருட்டு போவது நமது கையில் தான் இருக்கிறது எனது கடவுச் சொல்லைக் கண்டுபிடியுங்கள்’ பார்க்கலாம் என்று உங்களிடம் சொன்னால் முதலில் என்ன செய்வீர்கள்? எனது பெயர், என் அப்பா பெயர், என் ஊர், என் வயது அல்லது 123456 , abcdef இந்த மாதிரிதானே முயற்சி செய்வீர்கள்? இதுபோன்ற பெயர்களை கொண்டு கடவுச்சொல் உருவாக்குவதை நாம் முற்று முழுதாக தவிர்த்துக்கொள்ளவேண்டும் . இதுமாதிரி அர்த்தம் தரும் வேறு எந்த பெயரையும் பயன்படுத்துவது பாதுகாப்பானதல்ல இதற்கென சில திருட்டு மென்பொருட்கள் உள்ளன அதில் இதுபோன்ற கடவுச்சொல் சேமித்து வைக்கும் கோப்பைக் கொடுத்தால் போதும் உடனே உங்கள் கடவுச்சொல்லை கண்டுபிடித்துவிடும். அடுத்து நீங்கள் கடவுச்சொல்லை தட்டச்சு செய்யும் போது யாரும் பின்னால் இருந்து பார்க்கின்றனரா? என உறுதி செய்துகொள்ளுங்கள் பக்கத்தில் யாரும் இருந்தால் கடவுச்சொல் இடுவதை நிறுத்துங்கள் பல இடங்களில் 6 இலக்கமே போதும் எனச் சொல்வார்கள் ஆனால் நீங்கள் நீளமான கடவுச்சொல்லை அமைத்துக் கொள்ளுங்கள் கடவுச்சொல் இடும் கட்டம் தாண்டியும் நீளமாக கடவுச்சொல்லை அமைத்துக் கொள்ளலாம். ஸ்பைவேர், மால்வேர் போன்ற வைரஸ்கள் நமது கணினியில் இருந்து தகவல்களை சிலருக்கு அனுப்பிக் கொண்டிருக்கலாம். இச் சந்தர்ப்பத்தில் நமது கடவுச்சொல்லும் போக வாய்ப்புண்டு. எனவே நீங்கள் கணினித்திரையின் கீழ்ப் பக்கம் வலது சொடுக்கி Task Manager திறந்து பாருங்கள் உங்களுக்குத் தெரியாத ஏதேனும் பின்புலத்தில் ஓடிக் கொண்டிருக்கிறதா? என்று இம்மாதிரி மென்பொருட்கள் நீங்கள் தட்டச்சு செய்பவனவற்றை உடனுக்குடன் தனது முதலாளிக்கு அனுப்பும் வல்லமை வாய்ந்தவை. மற்றவர்களின் கணினியில் புகுந்து திருடுவது சேதம் விளைவிப்பது என்பது ஒரு சிலரால் மட்டும்தான் முடியும் எதோ நானும் செய்தேன் என்று சும்மாவேனும் சிலர் பொய் சொல்லக் கூடும் அதற்கு Hack மற்றும் Crack போன்ற துறைகளில் நல்ல தேர்ச்சி வேண்டும் எனவே மற்றவர் உங்கள் கணினியில் நுழையாமல் தடுக்க நல்ல வைரஸ் பாதுகாப்பு மென்பொருளை நிறுவிக்கொள்ள வேண்டும். முடிந்தவரை ஜிமெயில், யாஹூ மற்றும் கொட்மெயில் போன்ற தளங்களில் தானாக உள்ளே நுழைவதை (auto login) தவிருங்கள். அதேபோல ஒவ்வொரு முறையும் மின்னஞ்சல் அல்லது கடவுச்சொல் இட்ட தளங்களில் இருந்து வெளியேறும் போது லாக்கவுட் செய்து வெளியேறுங்கள். அடுத்து முக்கியமாக நாம் கடவுச்சொல் தேர்வு செய்யும்போது எண்கள் மற்றும் எழுத்துகளுக்கு இடையிடையே சிம்போல் (symbol) :- ! . , * - + `~ @ # $ % ^ & ( ) _ = : ; / போன்றவைகளையும் உள்ளடக்கி கடினமான கடவுச் சொல்லாக தேர்வு செய்வது மிக மிக பாதுகாப்பானது.

Tuesday, October 19, 2010

பரணி

பரணி - மிகவும் அமைதியான பெயரையும், குணத்தையும் கொண்டவர்... இவரின் எழுத்து மட்டுமே பல சமயங்களில் பேசும் எங்கள் TN6 -இன் அறையில். இப்பொழுதும் ரூம் ல id லாம் ஏத்தி ஏதோ சோதனை செய்றேன் என்று கூறுகிறார், ஆனால் இதுவரை அவர் மைக்-ல பேசி கூட யாரும் கேட்டு இருக்க மாட்டாங்க. ஏன் எதுக்குனே தெரியாமல், எப்பா பார்த்தாலும் ரூம் ல சிரிச்சுகிட்டே இருபார். கேம் நடந்தால் உடனடியா இடத்தை காலி செய்வதில் இவருக்கு நிகர் யாரும் இல்லை. இவர் எத்தன id ல வந்தாலும், இவரது வண்ணத்து பூச்சி (lll_x _vannathu _poochi _x_lll) id மிக பிரமாதமாக இருக்கும். பரணி, பரணி ஆழ்வாரா????? பொறுத்திருந்து பார்போம்.....

Tuesday, October 12, 2010

புதுப் பொலிவுடன் வெளிவந்துள்ள facebook group

facebook இணைய தளத்தில் அன்றாடம் பல விடயங்களை எமது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகின்றோம். இப்படி நாம் ஒருவிடயத்தை பகிரும் போது அது எமது அனைத்து நண்பர்களும் பார்த்து வந்தார்கள். அந்தப் பகிர்தலில் பல குறைபாடுகள், ப்ரைவசி பிரச்சினைகள் காணப்படுவதாக பலரும் முறைப்பாடுகளை மேற்கொண்டுவந்தார்கள். அதற்கு பதிலழிக்கும் வகையில் இந்த புதிய Groups வெளிவந்துள்ளது. இப்போது உங்கள் குடும்ப photo வை உங்களது உறவினர்கள் மட்டும் பார்க்கும் வகையில் பகிர்ந்து கொள்ளலாம். இப்போது ஒரு இணைய தள முகவரியினை உங்கள் நெருங்கிய நண்பர்களிடையே மட்டும் பகிரலாம். மேலும் நாங்கள் குழுவாக சேர்ந்து chat ம் பண்ணலாம். உங்கள் நண்பர்களிடையே குழுக்களை உருவாக்கி எமது தனிப்பட்ட விடயங்களை பாதுகாப்பாக பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பினை இந்த புதிய Groups தந்துள்ளது. பலரும் எதிர்பார்த்த ப்ரைவசி இங்கு அதிகமாகவே காணப்படுகிறது. நான் சொல்வதைவிட நீங்கள் செய்து பார்க்கும் போது இலகுவாக புரியக்கூடியதாக இருக்கும். இப்போதோ உங்கள் நண்பர்களிடையே ஒரு குழுவினை (group)உருவாக்கி பயன்படுத்திப்பாருங்கள்.

Monday, October 4, 2010

எச்சரிக்கை : facebook “Like” இனூடாக வரும் வைரஸ்

facebook இணைய தளத்தில் காணப்படும் “Like” பட்டனினூடாக வைரஸ் ஒன்று பரப்பப்பட்டு வருகின்றதாம். Javascript ன் துணையுடனேயே இது செயற்பட்டுவருகின்றது. “Shocking! This girl killed herself after her dad posted this photo.” இந்த வாசகத்துடைனையே இந்த வைரஸ் பரவி வருகிறது. “Shocking! This girl killed herself after her dad posted this photo.” எனும் வாசகத்தை click செய்யும் போது தானகவே குறிப்பிட்ட இந்த வாசகத்தை ‘Like’ செய்து உங்கள் ‘wall’ இலும் இந்த வாசகத்தை போட்டுவிடும். இவ்வாறு பல்லாயிரக்கணக்கான facebook பயனாளர்களை தொல்லை செய்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேற்குறிப்பிட்ட வாசகத்துடன் ஏதேனும் வந்தால் ,அதனை click செய்ய வேண்டாம்

Wednesday, September 22, 2010

My Computer திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதா?

நீங்கள் Windows XP இயங்குதளம் உபயோகித்துக் கொண்டிருக்கீறீர்களா? My Computer -ல் க்ளிக் செய்து வெகு நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதா? இதோ உங்களுக்கான தீர்வு.., My Computer ஐ திறந்து கொண்டு அதில் உள்ள Tools மெனுவில் Folder Options வசதியை க்ளிக் செய்யுங்கள். இனி திறக்கும் Folder Options விண்டோவில் View டேபிற்குச் சென்று, அங்கு Files and Folders இற்கு கீழாக உள்ள “Automatically search for network folders and printers” என்பதற்கு நேராக உள்ள Check Box ஐ uncheck செய்து விடுங்கள். இனி My computer முன்பை விட வேகமாக திறக்கும்.

Monday, September 20, 2010

சௌரவ்_கங்குலி_ரசிகன் (பார்த்தி)

தில்_பார்த்தி யாக அறிமுகம் ஆனா இவர், இப்பொழுது சௌரவ்_கங்குலி_ரசிகன் னாக TN6-ல் வளம் வருகிறார்..... பொண்ணுக கிட்ட கடலை, மொக்கை, தம், பீர் இப்டி எந்த பழக்கமும் இல்லாத ஒரு சின்ன பையன்னு சொல்லிக்கிட்டு இருக்கும் ஒரு நல்ல நண்பன்..... இவர் எல்லா விஷயத்திலும் வித்தியாசமாக இருக்க விரும்புவர்..... வாழ்கைல எப்போவும் சந்தோஷமா இருக்கணும்னு இவர பார்த்து கத்துக்கணும்..... என்ன நடந்தாலும் எப்போவும் சிரிச்சுகிட்டே இருப்பார்...... ஆனா ரூம் ல கேம்-னு வந்துட்டா முதல எஸ்கேப் ஆகுறது இவர் ID-யா தான் இருக்கும்......

Wednesday, September 15, 2010

இசை பிரியன் பஷீர்

இசை பொறியன் பஷீர் என்று செல்லமாக அழைக்கப்படும் இவர் உருவானது என்னமோ TN6 -ல தான்,, அனால் இப்போது எல்லா ரூம்களிலும் கலக்குகிறார்...... ஆரம்பத்தில் பாடகராக அறிமுகம் ஆனா இவர், இப்போது பெரிய பேச்சாளராகவும் மாறிவிட்டார்...... இசை பிரியனாக இருந்த இவரை இசை பொரியனாக மற்றியதலோ என்னவோ, பேசியே பொறித்து தள்ளிவிடுவார் எதிரிகளை இப்போதெல்லாம்...... அனால் சில நேரங்களில், இவர் பாடுவதை இன்னும் மறக்காமல் செய்து கொண்டிருக்கிறார்......

Tuesday, September 14, 2010

பிரபீன்______Prabeen

பிரபீன்..... எங்கள் TN6 -இன் முக்கியமான செல்ல நண்பன்.... எங்களில் யாருக்கு எந்த உதவியானாலும் தயங்காமல் முன் வந்து நின்று செய்யும் நல்ல உள்ளம் படைத்தவர்.... நண்பர்களை வேறு யாராவது ஏதும் கூறிவிட்டால், ஏன், எதற்கு, என்று கூட கேட்காமல் உடனே பொங்கி எழுந்து விடுவார்.... இவனுக்கு கொஞ்சம் கோவம் அதிகம் தான், அனால் ஒரு நாளுக்கு மேல் அவன் கோவம் இருக்காது.மிண்டும் நண்பர்களை தேடி வந்து விடுவார்.... தேவை இல்லாமல் மைக் கை பிடிக்க மாட்டார் .... அப்படி பிடித்தால் எளிதில் விட மாட்டார் .... இவர் கடலைலாம் பிம்-இல்(PM) மட்டும் தான், மெயின் ரூம்-ல இவர் மொக்கை மட்டும் தான் போடுவார் ....