எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்...புது,பொலிவுடன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது.

Thursday, November 5, 2009

பிரியும் போது புரியும்


என் பாசம்
புரியதவர்களுக்கு புரியும்
இந்த உயிர் மறையும் போது
அந்த பிரியம்,
என் மௌனம்
அறியாதவர்களுக்கு அறியும்
மௌனத்தின் வலிமை
நான் கண் மூடும் போது
என் கண்களின் பாசை தெரியும்
நான் கண்ணுக்கு தெரியாத போது
என் வாழ்வின் அர்த்தம் புரியும்
நான் உங்களை   விட்டு பிரியும் போது...

Sunday, November 1, 2009

ஆர்ச் மனசு

எங்கள் அறையின் தட்டச்சு மைந்தன் என்ற பட்டத்தை தனக்கு மட்டுமே உரியதாக்கி கொண்டவர்தான் "ஆர்ச் மனசு". ரொம்ப காலமாக எங்கள் அறைக்கு வரும் இவருக்கு ஒருமுறைகூட மண்டையில் கொண்டை முலைத்து யாரும் பார்த்ததில்லை.

எங்களில் பலர் முயன்று பார்த்தும் இவருக்கு கொண்டை அல்ல சில முடிகள் கூட முலைக்கவில்லை.
முகம் பார்க்காமல் நட்பு கொள்வது chat அதிலும் ஒரு படி மேலே சென்று குரல் கூட கேட்காமல் நட்பு வட்டதிற்குள் நுழைந்தவர்தான் எங்கள் ஆர்ச் மனசு.

கிரி அண்ணா...

எந்த விதமான அடை மொழியும் இல்லாமல் அன்று முதல் இன்று வரை தன் பெயரை மட்டுமே தன் அடையாளமாக சுமந்து வரும் எங்கள் கிரி அண்ணா எங்கள் அறையின் மூத்த தோழர்களில் முக்கிய தோழர் என்றே குறிப்பிடலாம்.

அண்ணா என்ற ஒற்றை மந்திர சொல்லால் இவரின் ஒட்டுமொத்த பாசத்தயும் வென்றுவிடலாம்.
அப்படிப்பட்ட பாசக்கார நண்பர் எங்கள் கிரி அண்ணா.

பல நேரங்களில் ஆழ் கடலின் அமைதியுடன் இருக்கும் எங்கள் கிரி அண்ணா மிக சில நேரங்களில் மட்டும் ஆர்பரிக்கும் அலை கடலாகவும் மாறி விடுவார்.
சத்தமில்லாமல் பல சமூக சேவைகளை செய்து வரும் இளகிய உள்ளம் படைத்தவர் எங்கள் கிரி அண்ணா.

பாலாஜி

பாலாஜி அண்ணா என்று எல்லொராலும் அன்புடன் அழைக்கபடும் இவர் ஆரம்ப காலத்தில் தன் பெயரை மட்டுமெ அடையாளமாக கொண்டவர் ஆனால் இன்றொ தன் தமிழ் ஆர்வத்தின் காரணமாக "தங்க தமிழன்" என்ற அடைமொழியை தன் அடையாள மொழியாக்கிக் கொண்டவர்.


தமிழ் ஆர்வம் மட்டுமல்லாது இசை ஆர்வமும் உள்ள எங்கள் அண்ணனுக்கு சில பல நேரங்களில் தன் முரட்டு குரலால் இனிமையான பாடல்களை பாடக்கூடியவர்(இவர் பாஷையில் சொல்ல வேண்டுமானால் கத்த கூடியவர்). இவரே எங்கள் பாலாஜி அண்ணா.

ராதா கிரிஷ்

ராதா கிரிஷ் இவரை எங்கள் அறையின் எழுத்து தோழன் என்று குறிப்பிட்டால் அது மிகையாகாது.காரணம் இவர் பல நேரங்களில் தன் குரலை ஒலித்து வைத்து கொண்டுதான் வருவார்.

சில நேரங்களில் மட்டுமே பேசினாலும் அதை அழகாக பேச கூடியவர். நம்மில் பலர் பல விஷயங்களில் நல்லவர்களாக இருப்பினும் எங்கள் ராதா கிரிஷ் உயிர் நதியான உதிரத்தயே தானமாக குடுத்து, எல்லோருக்கும் ஒரு படி மெலே நல்லவர் என்ற பட்டத்தை தட்டி சென்றுள்ளார்.