எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்...புது,பொலிவுடன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது.

Showing posts with label கணினி. Show all posts
Showing posts with label கணினி. Show all posts

Saturday, January 1, 2011

பொது கம்ப்யூட்டரை பயன்படுத்துகிறீர்களா?

கம்ப்யூட்டர் மையங்கள், பொதுவான அலுவலகங்கள், வாடகைக்கு கம்ப்யூட்டரைத் தரும் இடங்கள் ஆகியவற்றில் உங்கள் கம்ப்யூட்டர் பணிகளை மேற் கொள்கிறீர்களா? அவை எல்லாம் உங்கள் வீட்டில் உள்ள கம்ப்யூட்டரைப் போல் பாதுகாப்பானவையாக இருக்காது. எனவே கவனமாகத்தான் இவற்றைப் பயன்படுத்த வேண்டும். குறிப்பான ஐந்து எச்சரிக்கைகளை இங்கு காண்போம்.

1. என்றைக்கும் பொதுக் கம்ப்யூட்டர்களில் உங்கள் பேங்க் அக்கவுண்ட்டைக் கையாளும் வேலையை வைத்துக் கொள்ள வேண்டாம். அந்தக் கம்ப்யூட்டரில் ஸ்பைவேர் அல்லது அட்வேர் என்ற வகையிலான புரோகிராம்கள் இருக்கலாம். இவை திருட்டுத்தனமாக உங்கள் அக்கவுண்ட் அதற்கான பாஸ்வேர்ட்களைப் பதிவு செய்து யாருக்கேனும் அனுப்பலாம். இதனால் உங்கள் அக்கவுண்ட்டில் இருந்து பணம் பறிபோகும் வாய்ப்புண்டு.

2. உங்கள் நிதி சார்ந்த கணக்கு வழக்குகள் அல்லது வருமான வரி சம்பந்தமான பைல்களை ஹோட்டல் ரிசப்ஷனில் விட்டுவிட்டு வருவீர்களா? வரமாட்டீர்கள் அல்லவா? அதுபோல பொதுக் கம்ப்யூட்டர்களில் உங்கள் வருமானம் அல்லது நிதி சார்ந்த பைல்களைத் தயார் செய்தால் உங்களுடைய பிளாப்பி அல்லது சிடியில் காப்பி செய்து பின் கம்ப்யூட்டரில் இருந்து அழித்துவிடவும். ரீசைக்கிள் பின்னில் கூட இருக்கக் கூடாது.

3. பொதுக் கம்ப்யூட்டர்கள் மூலம் எந்தப் பொருளையும் வாங்கக் கூடாது. இதனாலும் உங்கள் பெர்சனல் தகவல்கள் போக வாய்ப்புண்டு.

4. பொதுக் கம்ப்யூட்டர்களில் இன்டர்நெட் பிரவுசிங் செய்து முடித்தவுடன் இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் உள்ள டெம்பரரி போல்டரில் உள்ள பைல்களை அழித்துவிடுங்கள். இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் Tools, Internet Options சென்று Delete பட்டனைத் தட்டி அழித்துவிடுங்கள். அல்லது Delete All பட்டனைத் தட்டுங்கள்.

5. இன்னொரு சின்ன வேலையும் பாதுகாப்பானதே. கம்ப்யூட்டரை ரீ பூட் செய்திடுங்கள். இது மிச்சம் சொச்சம் மெமரியில் இருக்கும் பைல்களை அழித்துவிடும்.

Tuesday, December 28, 2010

விண்டோஸ் எக்ஸ்பி- விஸ்டா சில ரகசியங்கள்

விண்டோஸ் எக்ஸ்பி மற்றும் விஸ்டா இயக்கத் தொகுப்புகளைப் பயன்படுத்துவோருக்கு சில ரகசிய ட்யூனிங் டிப்ஸ் இங்கு தரப்படுகின்றன. இவை நம் இயக்க வேகத்தினை அதிகப்படுத்துவதுடன், நம் செயல்பாட்டிலும் சுவராஸ்யத்தை தரும். நேரம் மிச்சம், திறன் அதிகரிப்பு, விண்டோஸ் தோற்ற மேம்பாடு ஆகியவை இந்த டிப்ஸ்களின் நோக்கம். இவற்றால் உங்கள் கம்ப்யூட்டருக்கு எந்த கேடுதலும் ஏற்படாது என்றாலும், உங்கள் முக்கியமான பைல்களுக்கு பேக் அப் எடுத்து வைத்துக் கொண்டு இந்த டிப்ஸ்களை இயக்கிப் பார்க்கவும். இந்த டிப்ஸ்களில் கண்ட்ரோல் பேனல் குறிக்கும் குறிப்புகள், உங்கள் கம்ப்யூட்டரில் கண்ட்ரோல் பேனல் கிளாசிக் வியூவில் இருப்பதாக எடுத்துக் கொண்டு தரப்படுகின்றன. ஸ்டார்ட் மெனு கிளிக் செய்து, கண்ட்ரோல் பேனல் சென்று, இடது மேலாக உள்ள ஒரு லிங்க்கில் கிளிக் செய்தால், கிளாசிக் வியூவிற்கு மாறிக் கொள்ளலாம். 1. டாஸ்க் பார் ஐட்டம் அனைத்தையும் மொத்தமாக மூட (எக்ஸ்பி): டாஸ்க்பாரில் ஒன்றுக்கு மேற்பட்ட ஐட்டங்களையும், போல்டர்களையும் வைத்திருக் கிறீர்களா? இவை அனைத்தையும் மொத்தமாக ஒரே கிளிக்கில் மூடலாம். கண்ட்ரோல் கீயை அழுத்திக் கொண்டு, ஒவ்வொரு ஐட்டமாக, டபுள் கிளிக் செய்திடவும். பின்னர், ஏதேனும் ஒன்றில் ரைட் கிளிக் செய்து, எழுந்து வரும் மெனுவில், குளோஸ் குரூப் (Close Group) என்பதில் கிளிக் செய்திடவும். 2. சிஸ்டம் ரெஸ்டோர் இடத்தைப் பெற (எக்ஸ்பி): உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் இடம் குறைவாக உள்ளது என்ற எச்சரிக்கைச் செய்தி வருகிறதா? எந்த ட்ரைவ் சென்று, எப்படிப்பட்ட பைல்களை நீக்கி இடம் மீட்பது என்று குழப்பமா? சிஸ்டம் ரெஸ்டோர் வசதிக்கென உள்ள இடத்தைக் குறைத்து, உங்கள் ஹார்ட் டிஸ்க் இடப் பிரச்னையைத் தற்காலிகமாக சமாளிக்கலாம். ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல் சென்று, சிஸ்டம் ஐகானில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் விண்டோவில் ரெஸ்டோர் டேப்பில் கிளிக் செய்திடவும். அதில் உள்ள ஸ்லைடரைப் பயன்படுத்தி, எவ்வளவு ஹார்ட் டிஸ்க் இடத்தை மீட்கலாம் என்று பார்க்கவும். அடிக்கடி ஹார்ட் டிஸ்க்கில் உள்ள பைல்களுக்குப் பேக் அப் எடுக்கும் பழக்கம் உள்ளவராக இருந்தால், சிஸ்டம் ரெஸ்டோர் உங்களுக்குத் தேவை இல்லையே! எனவே இந்த வசதியை மொத்தமாக மூடிவிடலாம். இதற்கென ஒதுக்கப்பட்ட மொத்த இடமும் மிச்சமாகும். 3. டாஸ்க் பாரில் வெப் ஷார்ட்கட் (விஸ்டா): இணைய தளங்களை வேகமாகத் திறக்க, டாஸ்க்பாரில் உள்ள காலி இடத்தில், ரைட் கிளிக் செய்திடவும். எழுந்து வரும் மெனுவில் Toolbars என்பதைத் தேர்ந்தெடுக்கவும். அதில் உள்ள அட்ரஸ் ஆப்ஷனில் கிளிக் செய்திடவும். இங்கு உங்கள் இணைய தள முகவரியினை டைப் செய்திடவும். விண்டோஸ் இப்போது அந்த இணைய தளத்தினை, உங்கள் பிரவுசரைத் திறந்து இயக்கிக் காட்டும். 4. ரீசைக்கிள் பின்னைத் தாண்ட: அழிக்கப்படும் பைல்கள் ரீசைக்கிள் பின்னில் சென்று, அங்கு தொடர்ந்து இடத்தைக் கொண்டிருக்கும். இதனால் ஹார்ட் டிஸ்க் இடம் குறையலாம். எனவே ஒரு பைல் அறவே நீக்கப்பட வேண்டும். அது ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லக் கூடாது என எண்ணினால், ஷிப்ட் அழுத்தி டெலீட் கீயை அழுத்தி, அந்த பைலை முற்றிலுமாக நீக்கவும். 5. கம்ப்யூட்டரை யார் ஷட் டவுண் செய்வது? (எக்ஸ்பி): உங்கள் வீட்டில் அல்லது அலுவலகத்தில் உள்ள உங்களின் பெர்சனல் கம்ப்யூட்டரை, உங்களைத் தவிர மற்றவர்கள் ஷட் டவுண் செய்வதனைத் தடுக்க, ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல் சென்று, Administrative Tools செல்லவும். இங்கு Local Policies என்பதில் டபுள் கிளிக் செய்திடவும். பின்னர் Security Options என்பதைத் தேர்ந்தெடுக்கவும். வலது புறம், ‘Shutdown: allow system to be shut down without having to log on’ என்று இருக்கும் இடம் சென்று அதில் டபுள் கிளிக் செய்திடவும். அதன் பின்னர் Disabled என்பதைத் தேர்ந்தெடுக்கவும். 6. டிஸ்க் ட்ரைவ் மூலம் நேரத்தை மிச்சப்படுத்த (எக்ஸ்பி): உங்களுடைய சிடி அல்லது டிவிடி ட்ரைவிற்கான ஐகானை குயிக் லாஞ்ச் பாரில் வைக்கவும். இதற்கு மை கம்ப்யூட்டர் சென்று, சிடி/டிவிடி ஐகான இழுத்து வந்து, டாஸ்க்பாரில் குயிக் லாஞ்ச் ஏரியாவில் விடவும். இதன் மூலம், சிடியில் எழுதப்படக் காத்திருக்கும் பைல்களை, இந்த குயிக்லாஞ்ச் பாரில் உள்ள ட்ரைவ் ஐகானைக் கிளிக் செய்து பார்க்கலாம். ட்ரைவ் ட்ரேயினைத் திறக்கவும் செய்திடலாம். இதே போல எந்த ஒரு பைலுக்கும், போல்டருக்கும் ஷார்ட் கட் ஐகான்களை, குயிக் லாஞ்ச் பாரில் வைத்து இயக்கலாம். 7. எர்ரர் ரிப்போர்ட் நிறுத்த (எக்ஸ்பி): ஏதாவது புரோகிராம் கிராஷ் ஆகி, அதனை வலுக்கட்டாயமாக மூடிடுகையில், விண்டோஸ் இதற்கான ரிப்போர்ட்டைத் தயார் செய்து அனுப்பவா என்ற பிழைச் செய்தியினைக் காட்டும். இந்த பிழைச் செய்தியினைக் காட்டாமல் இருக்கும்படி விண்டோஸ் எக்ஸ்பி இயக்கத்தினை அமைக்கலாம். ஸ்டார்ட், கண்ட்ரோல் பேனல், சிஸ்டம் எனச் செல்லவும். அங்கு கீழாக உள்ள எர்ரர் ரிப்போர்டிங் பட்டனில் (Error Reporting) கிளிக் செய்திடவும். இங்கு இந்த பிழைச் செய்தி தோன்றுவதனை நிறுத்தவும், மீண்டும் இயக்கவும் செய்திடலாம். 8.கீ போர்ட் ஷார்ட்கட் கீகள் (விஸ்டா): பொதுவான சில இயக்கங்களை வேகப்படுத்தும் வகையில் விஸ்டா இயக்கம் பல ஷார்ட்கட்கீ தொகுப்புகளைக் கொண்டுள்ளது. எடுத்துக்காட்டாக, விண்டோஸ் கீயினை அழுத்தியவாறே, ஸ்பேஸ் பார் தட்டினால், பின்னணியில் இருக்கும் ஸைட்பார், முன்னதாகக் கொண்டு வரப்படும். விண்டோஸ் கீயுடன் ‘T’ கீயை அழுத்தினால், டாஸ்க் பார் ஐட்டங்கள் ஒவ்வொன்றாகச் செல்லலாம். குயிக் லாஞ்ச் பாரில் உள்ள புரோகிராம்களை இயக்க, விண்டோஸ் கீயுடன், குயிக் லாஞ்ச் பாரில், திறக்கப்பட வேண்டிய புரோகிராம் எந்த இடத்தில் உள்ளதோ (1,2,3,4.. என) அந்த எண்ணை அழுத்தினால் போதும். 9. கூடுதல் கடிகாரம் (விஸ்டா): பன்னாடுகளின் அப்போதைய நேரத்தினை எப்போதும் அறிந்து கொள்ள விருப்பமா? நோட்டிபிகேஷன் ஏரியாவில் உள்ள கடிகாரத்தின் மீது ரைட் கிளிக் செய்திடவும். பின்னர் Adjust Date/Time’ என்பதனைத் தேர்ந்தெடுக் கவும். அடுத்து Additional Clocks என்பதில் கிளிக் செய்திடவும். இனி, ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கடிகாரங்களைக் காட்டுவதற்கான ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். ஒவ்வொரு கடிகாரத்திற்குமான நேர மண்டலத்தை அமைத்துப் பின்னர் ஓகே கிளிக் செய்திடவும். இனி திரையில், உங்களுக்குப் பிரியமானவர்கள் வசிக்கும் நாட்டின் கடிகாரம், அந்த நாட்டின் நேரத்தைக் காட்டியபடி இயங்கிக் கொண்டிருக்கும். 10. ஹெல்த் ரிப்போர்ட் பெற (விஸ்டா): கம்ப்யூட்டரின் ஹார்ட்வேர் மற்றும் பிற சாதனங்கள் குறித்த ஹெல்த் ரிப்போர்ட்டினைப் பெறும் வசதியினை விஸ்டா கொண்டுள்ளது. இதன் மூலம் நம் ஹார்ட்வேர் சாதனங்களின் தன்மையை அறிந்து கொள்ளலாம். ரிப்போர்ட் ஜெனரேட்டர் என்ற வசதியின் மூலம் இதனைப் பெறலாம். ஸ்டார்ட் கிளிக் செய்து, performance and information என டைப் செய்து, என்டர் தட்டவும். இங்கு இடது புறமாக உள்ள ‘Advanced tools’ என்பதில் கிளிக் செய்து, ‘Generate a system health report’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். சிறிது நேரம் கழித்து, உங்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் வேர் குறித்த ஹெல்த் ரிப்போர்ட் உங்களுக்கு பைலாகக் கிடைக்கும்.

Tuesday, December 14, 2010

கணினியை பராமரிக்க எளிய வழிமுறைகள்

இயந்திர உறுப்புகளை Hard ware என்றும் அதனை இயக்க வைக்கும் புறொக்கிறாம்களை (மென்பொருள்களை) Soft Ware என்றும் அழைப்பர். ஒபறேற்ரிங் சிஸ்ரம் (மென்பொருள்) குழப்பம் அடைய நேரிட்டால் கணினி வேலை செய்ய மறுக்கின்றது. கணினியில் Hard ware (கடுமயான உறுப்பு) இலகுவில் பழுதடைவதில்லை. அவற்றின் தரத்தைப் பொறுத்து நீடித்து உழைக்கக் கூடியது. ஆனால் அவையும் சூழ்நிலை காரணமாக பழுதடைய வாய்ப்புகள் உள்ளன. Soft ware என அழைக்கப் பெறும் புறொக்கிறாம்கள் (மென்பொருள்கள்) மிக இலகுவில் குழம்பி விடுகின்றது. அவறில் உள்ள சிறு பிழைகளை கணினியே சீர் செய்யக்கூடிய வசதிகள் ஒபறேற்ரிங் சிஸ்ரம் வழங்குகின்றது. அதற்கான வழிமுறைகள் இங்கே தரப்பெற்றுள்ளன. நாம் ஒரு பொருளை உரிய முறையில் பராமரிக்காது விட்டால் அவை செயலிழந்து பயனற்றதாகி விடுகின்றது. கணிணி அதற்கு விதிவிலக்கல்ல. எல்லாமே கணினி மயம் ஆகிவிட்ட இக்காலத்தில் கணினி பழுதடைந்து விட்டால் பல நஷ்டங்களையும், மன வேதனைகளையும் ஏற்படுத்தி விடுகின்றது. ஒரு கணினியின் முதல் எதிரி அதனை பாவிக்கும் நாங்கள்தான். நாம் செய்ய வேண்டிய எளிய பராமரிப்பு வேலைகளை செய்யாமல் விடுவதும், தெளிவின்றி தேவைப்படாத சில மென்பொருளை (install) உட்புகுத்துவதும், அதனை ஒவ்வாத (புகை, தூசு, அதிக வெப்பம், அதிக குளிர்) இடத்தில் வைப்பதும் தான் அதற்கு காரணம். சில இணையத் தளங்களில் இலவசமாக கிடைக்கும் சில மென்பொருள்களை (programs) உங்கள் கணினியில் (install) உட்புகுத்தியதும்; அவை உங்களின் முக்கியமான இரகசியங்களை வேவு பார்த்து உங்களுக்கு தெரியாமலே உரியவர்களுக்கு அனுப்பி விடுகின்றது. அத்துடன் சில மென்பொருகள் உங்கள் கணினிக்கு நோய் வரக்கூடிய வைரஸ்சுகளை உட்புகுத்தி கணினியை செயலிளக்கச் செய்கிறது. எமக்கு அறிமுகம் இல்லாத இடத்தில் இருந்து கிடைக்கும் ஈ-மெயில் கூட வைரசை பரப்பும் ஒரு காவியாக இருக்கலாம். அதனால் சில வேளைகளில் நீங்கள் சேமித்து வைத்த முக்கிய குறிப்புகளை இழக்கவும் நேரிடலாம். அவற்றை கண்டுபிடித்து அதனைச் செயலிழக்கச் செவதற்கான வழிமுறைகளைக் கைப்பிடிப்பது அவசியமாகும். நம்பிக்கையானவர்களிடம் இருந்து வரும் ஈ-மெயிகளை மாத்திரம் திறந்து பாருங்கள். வைரஸ் இல்லாத கணினிகளில் பிரதிசெய்த கோப்புகளை மாத்திரம் உங்கள் கணினியில் திறந்து பாருங்கள். இப்படிச் செய்வதன் மூலமும் நோய் பரவாமல் தடுக்கலாம். கணினிகளை மாதம் ஒரு முறையாவது ஸ்கேன் செய்யுங்கள். கணினியில் பதியப்பெற்றிருக்கும் ஒப்றேற்றிங் சிஸ்ரம்; கணினி தன்னைத் தானே தன்னிச்சையாக சரி செய்யக்கூடிய மென்பொருளை (programs) கொண்டுள்ளது. ஆனால் அவை தானாக இயங்க மாட்டாது. அவற்றை தேவைக்கேற்ப நாமே இயக்கிக் கொள்ளல் வேண்டும். அப்படி உள்ள ஒரு முறைதான் ஸ்கனிங் செய்தல். எப்படிச் செய்வது? உங்கள் கணினியில் My computer என்ற பகுதியை திறவுங்கள். அதில் உங்கள் ஹாட் டிஸ்க் (C:) என காட்டப்பெற்றிருக்கும். அதில் உங்கள் மவுசின் அம்புக்குறியை பதிய வைத்து (Right Click) மௌசின் இரண்டாவது பொத்தானை அழுத்துங்கள். அப்போது ஒரு மெனு தோன்றும். அதில் கடைசியாக உள்ள Properties என்ற பகுதியை கிளிக் செய்யுங்கள். அப்போது ஒரு விண்டோ திறபடும். அதில் General, Tools, Hardware, Sharing, Quota என்னும் ரப்ஸும் கீழே Disk Clanup என்ற பொத்தானும் இருக்கும். அவற்றுள் Tools என்ற ரப்ஸை கிளிக் செய்யுங்கள். அங்கே Check Now, Defragment Now, Backup Now என மூன்று பொத்தான்கள் காணப்படும். அவற்றுள் Check Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணினியை ஸ்கான் செயலாம். Defragment Now என்ற பொத்தானை அழுத்தினால் உங்கள் கணினியின் ஹாட் டிக்கை ஒழுங்கு படுத்தலாம். Backup Now எனபது பாதுகாப்புக் கருதி பிரதி செய்ய பாவிக்கலாம். Check Now என்ற பொத்தானை அழுத்தியதும் சிறிய ஒரு விண்டோ திறபடும். அதில் Automatically fix files system errors எனவும், Scan for and attempt recovery of bad sectors எனவும் இரு பெட்டிகள் இருக்கும். அவை இரண்டையும் கிளிக் செய்வதன் மூலம் சரி போடுங்கள். பின் Start என்ற பொத்தானை அழுத்துங்கள். ஸ்கன்னிங் உடனே ஆரப்ப மாகும். சில ஒப்றேற்றிங் சிஸ்ரம் கணினி திரும்ப ஆரம்பிக்கும் போதுதான் ஆரம்பமாகும். அதற்கும் உங்கள் அனுமதி கேட்கும். அதற்கும் Yes பொத்தானை அழுத்தவும். இப்போது கணினியில் பதியப்பெற்ற எல்லா கோப்புகளும் ஸ்கான் செய்யப்பெற்று அவற்றில் குழப்பம் இருந்தால் தன்னிச்சையாக அவை திருத்தப்படும். அத்துடன் நாம் நிரந்தரமாக சேமித்து வைப்பதற்காகப் பாவிக்கப்பெறும் ஹாட்டிஸ்க்கில் உள்ள சிறு பகுதிகளிள் (Sectors) பழுதடைந்து இருந்தால் அவற்றில் இருக்கும் பதிவுகளை வேறு பகுதிக்கு மாற்றி கணினியை சீராக இயங்கக் கூடியதாக அமைக்கின்றது. கணினி ஸ்கான் செய்வதற்கு அதில் பதிந்து வைத்துள்ள பைல்களின் அளவையும், ஹாட்டிஸ்கின் அளவையும் பொறுத்து நேரம் எடுத்துக்கொள்ளும்.

Wednesday, September 22, 2010

My Computer திறக்க அதிக நேரம் எடுத்துக் கொள்கிறதா?

நீங்கள் Windows XP இயங்குதளம் உபயோகித்துக் கொண்டிருக்கீறீர்களா? My Computer -ல் க்ளிக் செய்து வெகு நேரம் காத்திருக்க வேண்டியுள்ளதா? இதோ உங்களுக்கான தீர்வு.., My Computer ஐ திறந்து கொண்டு அதில் உள்ள Tools மெனுவில் Folder Options வசதியை க்ளிக் செய்யுங்கள். இனி திறக்கும் Folder Options விண்டோவில் View டேபிற்குச் சென்று, அங்கு Files and Folders இற்கு கீழாக உள்ள “Automatically search for network folders and printers” என்பதற்கு நேராக உள்ள Check Box ஐ uncheck செய்து விடுங்கள். இனி My computer முன்பை விட வேகமாக திறக்கும்.

Saturday, September 12, 2009

பாஸ்வேர்டுக்கு புதிய வழி


தட்டுங்கள் திறக்கப்படும் என்னும் எளிய விதி இன்டெர் நெட்டுக்கு பொருந்துவதில்லை. அங்கே கேளுங்கள் சொல்லப்படும் என்பதே கோலோச்சுகிறது.

அதாவது, இணைய வாசிகள் தட்டும்போது திறக்காமல் முதலில் கேட்பதற்கு பதில் சொல்லுங்கள் என்று அநேக இணைய தளங்கள் நிபந்தனை விதிக்கின்றன.

பொதுவாக சந்தாதாரர் களுக்கு மட்டுமே என சொல்லும் தளங்களும், பல்வேறு காரணங்களுக் காக உங்க ளைப்பற்றிய விவரங்கள் தெரிந்த பிறகே உள்ளே அனுமதிப்போம் என்று கராராக இருக்கும் கரங்களும் தான் இப்படி கேள்வி கேட்டு பதில் சொல்ல கட்டாயப் படுத்துகின்றன.

இதுபோன்ற தளங் களை பயன் படுத்த அவர்கள் கேட்கும் விவரங் களையெல்லாம் கொடுத்து விட்டு கூடவே இ-மெயில் முகவரியையும் சமர்ப்பித்து நமக்கான பயன்பாட்டு பெயர் அதாவது யூசர் நேம் மற்றும் அதனை இயக்க கூடிய பாஸ்வேர்டு அதாவது கடவுச் சொல் ஆகியவற்றை பெற்றுக்கொள்ள வேண்டும்.

அதன் பிறகு அந்த தளத்தை எப்போது பயன் படுத்த வேண்டும் என்றாலும், பயன்பாட்டு பெயரை சமர்ப்பித்து கடவுச்சொல்லை தெரிவித்தால் மட்டுமே உள்ளே நுழைய முடியும்.ஒரே ஒரு தளம் என்றால், இந்த முறையை பின்பற்றுவதில் எந்த சங்கடமும் இல்லை. ஆனால் பிரச்சனை என்னவென்றால் பல்வேறு தளங்களில் அவற்றின் சேவையை பயன்படுத்த இப்படி பல விதமான பயன்பாட்டு பெயரையும், கடவுச் சொல்லையும் உருவாக்கிக்கொள்ள வேண்டி இருக்கிறது.இ-காமர்ஸ் தளங்கள், இ-மெயில் சேவை தளங்கள், பிரத்யேக ஆன் லைன் இதழ்கள், அரசு தளங்கள் என்று பலவற்றில் இப்படி தனித்தனியே நமக்கான அடையாளத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டி இருக்கிறது.ஒவ்வொரு முறையும் அடையா ளத்தை உருவாக்க நேரத்தை செலவிட வேண்டியிருப்ப தோடு, பலவித அடையாளங்களை நிர்வகிப்பதும் சிக்கலாகிவிடுகிறது. கடவுச்சொல்லை மறந்து விடும் அபாயம் இருக்கிறது. இதன் காரணமாகவே இணையவாசிகளின் தகவல் தேடும் அனுபவம் சுமை மிக்கதாக மாறிவிடுகிறது.இதற்கு தீர்வாக வந்திருக்கும் புதிய சேவைதான் ‘ப்ரீ யுவர் ஐடி’.‘ஓபன் ஐடி டாட் நெட்’ இந்த சேவையை வழங்கி வருகிறது. இந்த தளத்தில் உங்களைப்பற்றிய விவரங்களை சமர்ப்பித்து (ஒரே) ஒரு கடவுச்சொல்லை பெற்றுக் கொண்டீர்கள் என்றால் போதுமானது.

வேறு எந்த இணைய தளத்தை பயன்படுத்தும்போதும், உங்களைப் பற்றிய விவரங்கள் கேட்கப்பட்டது என்றால், ஓபன் ஐடி அடையாளத்தை சமர்ப்பித்தீர்கள் என்றால் போதுமானது.

உங்களைப் பற்றிய விவரங்களை ஓபன் ஐடி வழங்கி நீங்கள் தளத்தின் உள்ளே செல்ல கதவைத் திறந்து விடும். இதன் மூலம் கட்டண சேவை போன்ற தளங்கள் ஒவ்வொன்றுக் கும் தனித்தனி அடையாளத்தை உருவாக்கிக்கொண்டிருக்க வேண் டியதில்லை.

ஒரு கதவைத் திறந்தால், ஓராயிரம் கதவுகள் திறக்கும் என்பதுபோல, இந்த ஒரே ஒரு கடவுச் சொல்லை வைத்துக்கொண்டு இன்டெர்நெட் முழுவதும் உலா வரலாம். ஏற்கனவே மைக்ரோசாப்ட் நிறுவனம் வழங்கிய பாஸ்வேர்ட் சேவை போன்றதே இது. அதைவிட மேம்பட்டதாக இது இருக்கிறது என ஓபன் ஐடி மார்தட்டிக் கொள்கிறது.

Friday, September 11, 2009

புளு-ரே மற்றும் எச்.டி–டிவிடிக்களை தயாரிக்க இலவச மென்பொருள்

சிடி மற்றும் டிவிடிக்களைத் தயாரிக்க அதற்கான சாப்ட்வேர் அப்ளிகேஷன்களைத் தேடுகிறீர்களா? அதுவும் இலவசமாக! மேலும் கூடுதல் வசதிகளாக புளு ரே மற்றும் எச்.டி–டிவிடிக்களையும் தயாரிக்கும் வசதி கொண்டதாகத் தேடுகிறீர்களா! ஆஹா! இத்தனையும் இலவசமா என்று வியப்படையாதீர்கள். சிடி பர்னர் எக்ஸ்பி என்ற புரோகிராம் இதைத்தான் செய்கிறது. உங்கள் சிஸ்டம் ஒத்துழைத்தா புளு ரே மற்றும் எச்.டி –டிவிடிக்களையும் தயாரித்து வழங்குகிறது.

இதன் லேட்டஸ்ட் பதிப்பு (4.2.4) ஆக கிடைக்கிறது. இதனை டவுண்லோட் செய்து நேரடியாக உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்தி டலாம். மற்ற சிடி பர்னர்களைக் காட்டிலும் இது நவீன வசதிகளைக் கொண்டுள்ளது. இதில் எந்தவிதமான விளம்பர புரோகிராம்கள் அல்லது கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களோ இணைந்து வருவதில்லை.

கம்ப்யூட்டரில் இதனை இன்ஸ்டால் செய்து இயக்கியவுடன் தொடக்க திரையில் ஐந்து பட்டன்கள் உள்ளன. அவை Data Disc, Audi Disc, Burn ISO image, Copy Disc and Erase Disc. ஆகியனவற்றினைத் தேர்ந்தெடுக்கத் தரப்பட்டிருக்கும் இன்டர்பேஸ் ஆகும். இதில் எது உங்கள் வேலைக்குச் சரியான பட்டனோ அதனைக் கிளிக் செய்திடவும். எடுத்துக் காட்டாக நீங்கள் டேட்டா பைல்களைக் கொண்டு சிடி உருவாக்கப் போகிறீர்கள் என்றால் இதனைத் தேர்ந்தெடுக்க வேண்டும். உடன் கிடைக்கும் விண்டோவில் மேலும் இரு பட்டன்கள் உள்ள ஆப்ஷன் திரை கிடைக்கும். பின் அதன் வழியே சென்றால் எளிதாக சிடி பர்ன் செய்யலாம்.

இந்த புரோகிராமினை விண் டோஸ் 2000 ல் தொடங்கி இன்றைய விஸ் டா ஆப்ப ரேட்டிங் சிஸ்டங்கள் வரையில் இயக்கலாம். இதனை இன்ஸ்டால் செய்திடும் முன் உங்கள் சிஸ்டத்தில் .net framework இருப்பதனை உறுதி செய்திடுங்கள். இது இல்லை என்றால் இந்த புரோகிராம் சரியாகச் செயல்படுவதில்லை.

Sunday, September 6, 2009

புகைப்படம் இல்லாம வலை உலாவியை திறக்க

நண்பர்களே நாம் வீட்டில் சில நேரங்களில் சில பதிவுகளை படிக்கும் போது யாராவது வந்து பார்த்துவிடுவார்களோ என்ற பயத்துடனே படித்துக் கொண்டிருப்பார்கள். அப்படி பார்த்து விட்டால் உடனே அந்த விண்டோவை மூடி விடுவார்கள் (அல்லது) கணிணியை அணைத்துவிடுவார்கள். அதற்குப் பதில் ஒரே கிளிக்கில் வேற டெஸ்க்டாப் திறந்தால் எப்படி இருக்கும்.


இந்த மென்பொருளின் பெயர் - டபுள் டெஸ்க்டாப் - DoubleDesktop 1.1
மென்பொருளின் அளவு - 205 கேபி மட்டுமே
புகைப்படங்கள் இல்லாமல் வலைத்தளங்கள் திறக்க
சில நேரங்கள் சில வலைத்தளங்களை திறக்கும் போது மிகவும் மெதுவாக திறக்கும் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும். இதை தவிர்க்க உங்களுக்கு அந்த வலைத்தளத்தில் உள்ள புகைப்படங்கள் திறக்க வேண்டாம் என்று நினைத்தால் சுலபமாக செய்யலாம். அத்துடன் டயல் அப் இணைய இணைப்பு உபயோகபடுத்துபவர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம்.

நெருப்பு நரி உலாவி உபயோகிக்கும் பயனாளர்கள் கீழே உள்ள வழிமுறையை பின்பற்றவும்.
நெருப்பு நரி உலாவி திறந்து அதில் Tools கிளிக் செய்து பின்னர் அதில் Options தேர்வு செய்து அதில் Content என்ற டேபை தேர்வு செய்யுங்கள். அதில் Load Images Automatically என்பதில் டிக் மார்க் எடுத்து விடுங்கள். பின்னர் OK தேர்வு செய்து வெளியேறுங்கள்.

இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் உபயோகிப்பவர்கள் இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 6 ஆம் பதிப்புக்கு மேல்

இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் திறந்து அதில் Tools கிளிக் செய்து அதனுள் Internet Options தேர்வு செய்து பின்னர் Advanced Tab என்பதனை தேர்வு செய்யுங்கள் கீழே கட்டத்தில் Multimedia என்பதற்கு கீழே Show Pictures அதன் நேரே பாக்ஸில் டிக் மார்க் எடுத்து விடுங்கள். பின்னர் OK தேர்வு செய்து வெளியேறுங்கள்.
ஆப்பிள் சபாரி உலாவி உபயோகிப்பவர்கள்

சபாரி திறந்து வைத்துக் கொள்ளுங்கள் மெனு கிளிக் செய்து அதில் Preferences தேர்வு செய்யுங்கள் பின்னர் மேலே Appearance என்பதனை கிளிக் செய்யுங்கள் அதில் Display images when the page opens. என்பதனை டிக் எடுத்து விடுங்கள் முடிந்தது பின்னரொ OK தேர்வு செய்து வெளியேறுங்கள்.

இனி உங்கள் உலாவியில் எந்த வலைத்தளம் திறந்தாலும் படங்கள் மட்டும் தோன்றாது.

கணினி மேலாண்மை (Computer Management) என்பது என்ன?

Computer Management என்பது 'Services, Applications, Disk tools மற்றும் User and Group Administration' ஆகியவற்றை ஒரே குடையின் கொண்டுள்ள கருவியாகும்.

மை கம்ப்யூட்டரில் வலது கிளிக் செய்து இதில் 'Manage' கிளிக் செய்தால் 'Computer Management' என்ற விண்டோ திறக்கும். இந்த விண்டோவில் இடதுபுறமுள்ள pane ல் 'system Tools, Storage மற்றும் Services and Applications' ஆகிய பகுதிகள் இருக்கும். ஒவ்வொன்றிலும் கிளிக் செய்திட வலதுபுறமுள்ள pane ல் அதன் விபரங்கள் பட்டியலிடப்படும். இதில் ஒவ்வொன்றிலும் என்ன வசதிகள் தரப்பட்டிருக்கின்றன என்பதை சுருக்கமாக பார்ப்போம்.


System Tools
இந்த பகுதியில் கணினியின் கண்காணிப்பு, பயனாளர்கள் மற்றும் பயனாளர் குழுக்களுக்கு வழங்கப்படும் உரிமைகள் சம்பந்தப்பட்ட அனைத்து கருவிகளும் கொடுக்கப்பட்டுள்ளன.

இதில் Shared Folders ஐ கிளிக் செய்தால் 'Shares, Sessions மற்றும் open files' ஆகிய மூன்றும் பட்டியலில் வரும். 'Shares' ஐ தேர்வு செய்தால் Network Shared Folders மற்றும் Windows Administrator ஆல் ரிமோட் அக்ஸஸ் இற்காக உருவாக்கப்பட்ட Shared Folders ஐ பார்க்கலாம். இதில் ஏதாவது குறிப்பிட்ட Folder இன் பகிர்வை நீக்க அந்த ஃபோல்டரில் வலது கிளிக் செய்து Sharing and Security யில் Share this Folder என்பதை uncheck செய்து விடுங்கள்.

Sessions என்பது தற்பொழுது உங்கள் கணினிக்கு தொடர்பிலிருக்கும் பயனாளர்கள் பற்றிய தகவல்கள், பயனாளர்களின் வகை, கணினியின் பெயர், திறந்துள்ள கோப்புகளின் எண்ணிக்கை, தொடர்பு கொண்ட நேரம் ஆகியவற்றை காண்பிக்கும். ஒருவேளை நீங்கள் எதிர்பாராத ஒரு பயனாளர் தொடர்பிலிருந்தால், அவர் இப்பொழுது உங்கள் கணினியில் எந்த ஃபோலடரிலிருந்து எந்த கோப்பை உபயோகித்துக் கொண்டிருக்கிறார் என்பதை 'Open Files' ஐ கிளிக் செய்வதன் மூலம் அறிந்து கொள்ளலாம். ஒரு அட்மினிஸ்டிரேட்டராக நீங்கள் அதை முடக்கவும் செய்யலாம்.

Local Users and Groups

உங்கள் கணினியில் உள்ள பயனாளர்கள் பற்றிய விவரங்களை அளிக்கும். புதிய பயனாளர் கணக்கு உருவாக்குவது, கணக்கை முடக்குவது, நீக்குவது, கடவுசொல்லை உருவாக்குவது, மாற்றுவது மற்றும் குறிப்பிட்ட பயனாளர் மறுமுறை லாகின் ஆகும்பொழுது கட்டாயமாக கடவுசொல்லை மாற்றும்படி கட்டளை கொடுப்பது என பல உபயோகமான கருவிகள் இருப்பதால் இது ஒன்றுக்க்கு மேற்பட்ட பயனர்களை கொண்ட கணினிக்கு மிகவும் உபயோகமானதாகும்.

Storage

இந்த பகுதியில் Disk Defragmenter மற்றும் Disk Management ஆகிய முக்கியமான கருவிகளும் Removable Storage கருவியும் உள்ளன.

இதில் Disk Defragmentation என்பது அனைவரும் அறிந்திருக்க வாய்ப்புகள் இருப்பதால் அதை இந்த பதிவில் தவிர்த்துவிடலாம்.

Disk Management ல் Partitions உருவாக்குவது மற்றும் Format மிகவும் எளிதாக செய்யலாம். இது நமது ஹார்ட் டிஸ்கில் உள்ள அனைத்து partitions மற்றும் சிடி/டிவிடி போன்ற அனைத்து வால்யூம்களையும் காண்பிக்கும். இந்த கருவியின் மூலம் Dos Command அல்லது Stratup Disk எதுவும் இல்லாமல் partition களை உருவாக்க முடியும். ட்ரைவ்களுக்கு தேவையான ட்ரைவ் லெட்டர்களையும் கொடுக்க முடியும்.
புதிய partition ஐ உருவாக்க, Unpartition Space ல் வலது கிளிக் செய்து New Partition ஐ கிளிக் செய்து, உங்களுக்கு தேவையான partition வகையை தேர்வு செய்து (Primary, Extended or Logical) அடுத்து வரும் திரையில் partition size, Volume Label மற்றும் partition வகை (FAT32/NTFS). Format வகையையும் தேர்வு செய்து கொள்ளலாம்.

எச்சரிக்கை
இந்த கருவியை உப்யோகிக்கும் பொழுது மிகவும் கவனமாகவும், வல்லுனர்களின் ஆலோசனையின்படியும் உபயோகிக்கவும்.
Services and Applications:-

இந்த கருவியை உபயோகித்து ஒரு குறிப்பிட்ட Service Start, Restart, Stop மற்றும் Pause செய்யலாம்.

Wednesday, September 2, 2009

கணினியின் வேகத்தை அதிகரிக்க 10 கட்டளைகள்

1. உங்கள் கணினியின் RAM எனப்படும் Random Access Memoryன் அளவை அதிகப்படுத்தவும். ஒரு சாதாரண கணினிக்கு 1GB போதுமானது. அதன் நினைவகத்தின் அளவை அதிகரிக்க அதிகரிக்க வேகமும் அதிகரிக்கும். இப்போது RAM ன் விலை மிகவும் மலிவுதான்.

2. கணினியில் ஏற்கனவே நிறுவியிருக்கக்கூடிய தேவையற்ற மென்பொருட்களை நீக்கிவிடுங்கள். புதிதாகக் கணினி வாங்கியிருந்தால் கூட அத்துடன் ஏராளமான தேவையற்ற மென்பொருட்களையும் நிறுவி இருப்பார்கள். அவற்றில் சில மென்பொருட்கள் மட்டுமே நமக்குப் பயன்படும். மீதி அனைத்தையும் நிராகரித்து நீக்கிவிடவும்.

பழைய கணினியிலும் தேவையற்ற மென்பொருட்கள் இருப்பின் அனைத்தையும் நீக்கிவிடவும். அவற்றிற்குரிய Copy இருந்தால் அதை மட்டும் CD / DVD ல் ஏற்றி burn செய்துகொள்ளவும்.

3. FireFox, Chrome, IE என ஒன்றுக்கு மேற்பட்ட browsersஐ நிறுவி இருந்தால் அவற்றில் ஏதேனும் ஒன்றை மட்டும் வைத்துக்கொண்டு மீதியை uninstall செய்துவிடவும்.

4. G-Talk, Yahoo Messenger, Live Messenger என ஒன்றுக்கு மேற்பட்ட அரட்டை அடிக்கும் பயன்பாடுகளைத் தனித்தனியாக நிறுவி இருந்தால் எல்லாவற்றையும் uninstall செய்துவிட்டு, digsby ( http://www.digsby.com/ ) போன்ற ஒரே ஒரு instant messenger (நேரடி அரட்டை அரங்கம்) ஐ நிறுவிக் கொள்ளவும்.

5. கணினியில் Windows இயங்குதளமானது boot ஆகும்போது நிறையப் பயன்பாடுகளும் இணைந்தே துவங்கும். இதற்கு auto startup என்று பெயர். இப்படி ஏராளமான பயன்பாடுகளும் விண்டோஸ் இயங்குதளத்துடன் துவங்கினால் அதன் வேகம் மிகக் குறைந்துவிடும். http://www.revouninstaller.com/ பயன்படுத்தி தேவையற்ற தானியங்கிப் பயன்பாடுகளைக் கழித்துவிடவும்.

6. Startup Delayer ஐ இறக்கி அதைப் பயன்படுத்தி Autoloading பயன்பாடுகளை நீக்கிவிடலாம்.

7. Windows பயனர்கள் அதன் தேவையில்லாத animation தொந்தரவுகளால் அதன் வேகம் குறைவதை உணர்ந்திருப்பார்கள்.My Computerல் right click செய்து, advanced tabல் settingsல், Performanceல் Animate Windows When minimizing and maximizing என்கிறதை disable செய்யவும். மேலும் தேவையில்லாதவற்றையும் disable செய்யவும்.

8. Desktopல் இருக்கும் குறுக்குவழிச் சுட்டிகளுக்கான படங்களை அகற்றிவிடலாம். எனது நண்பர் ஒருவர் 50க்கு மேற்பட்ட desktop icons வைத்திருந்தார். அதனாலேயே அவரது கணினியின் வேகம் மிகக் குறைந்தது. தேவையில்லாத desktop ஐகான்ஸ் எல்லாவற்றையும் நீக்கியபின் கணினியின் வேகம் அதிகரித்தது.
 
9. கணினியில் ஒரு நெருப்புச்சுவர் (firewall), வைரசு எதிர்ப்போன் (anti virus), ஸ்பைவேர் எதிர்ப்போன் (anti spyware) கண்டிப்பாகத் தேவை. அவற்றை அடிக்கடி புதுப்பித்துக்கொண்டே இருக்கவேண்டும்.

10. ஆனால் இணையத்துடன் இணைந்திருக்காத தனிக் கணினிகள் மற்றும் வெளியிடத்து Floppy, CD, DVD, Pen Drive போன்றவற்றை அனுமதிக்காத கணினிகளில் மேலே கூறிய firewall, antivirus, antispyware போன்ற எதுவும் நிறுவாமல் இருந்தால் அதன் வேகம் மும்மடங்கு ஆகும் என்பதில் ஐயமில்லை.

குறிப்பு :

ஒரு முறை இயங்குதளத்தையும், தேவையான பயன்பாடுகளையும் நிறுவியபிறகு வேறு ஏதேனும் வெளியுலகத் தொடர்பே ஏற்படாத வகையில் தனித்திருக்கும் கணினிகளுக்கு மட்டுமே இதைப் பரிந்துரைக்கலாம்.

ஹார்ட் டிஸ்கில் உள்ள கோப்புகளை நிரந்தரமாக அழிப்பது எப்படி?

உங்கள் கணினியை வேறு எவருக்கேனும் விற்பனை செய்யும் போது கணினியில் உள்ள கோப்புகளை சுத்தமாக அழித்து விட்டு கொடுப்பீர்கள். அழிக்கும் போது Shift + Delete பயன்படுத்தினால் சுத்தமாக அழிந்துவிடும் என்று நினைத்து அழிப்பார்கள்.


ஆனால் இப்போது மீட்டு எடுக்கும் மென்பொருள்கள் கொண்டு (Recovery Software ) அழித்த கோப்புகளை திருடி அடுத்தவரின் அந்தரங்கத்தை மேய்வதில் நிறைய பேருக்கு விருப்பம். அதனால் கோப்புகளை அழிக்கும் போது அல்லது ஹார்ட் டிஸ்கை Format செய்ய வேண்டும் என்று நினைத்தால் உங்களுக்கு இந்த இரண்டு மென்பொருள்கள் உதவும். இந்த மென்பொருள்களை கொண்டு அழிக்கும் போது மறுபடியும் கோப்புகள் கிடைக்காதவாறு துடைத்து விடும்.

Tuesday, September 1, 2009

யு.எஸ்.பி.சேப்லி ரிமூவ் ( USB Safely Remove )

விண்டோஸ் சிஸ்டத்திலேயே யு.எஸ்.பி. போர்ட்களில் இணைக்கப்படும் சாதனங்களை எடுத்திட சேப்லி ரிமூவ் வசதி தரப்பட்டுள்ளது. இருப்பினும் பல தேர்ட் பார்ட்டி புரோகிராம்கள் இதற்கென வடிவமைக்கப்பட்டு நமக்கு இணையத்தில் கிடைக்கின்றன.USB Safely Remove என்ற அந்த புரோகிராமின் புதிய பதிப்பு 4.1 தற்போது வெளியாகியுள்ளது.

இதில் என்ன புதிதாய் இருக்கிறது என்று பார்க்கலாமா!

1. இந்த புரோகிராமில் இருந்த ஆட்டோ ரன் வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது. எந்த சாதனத்தை யு.எஸ்.பி. போர்ட்டில் இணைத்தாலும் அதில் உள்ள தேர்ட் பார்ட்டி புரோகிராம் ஒன்றினை இயக்கும் வகையில் செட் செய்திடலாம். இதனைப் பயன்படுத்தி எக்ஸ்புளோரர் புரோகிராமினை இயக்கலாம். அல்லது பைல் மேனேஜரை இயக்கி என்ன என்ன பைல்கள் இருக்கின்றன எனப்பார்க்கலாம்.

2. யு.எஸ்.பி.யில் இணைக்கப்பட்டுள்ள சாதனத்தை நீக்கும் முன் அதில் உள்ள பைல்களை ஆட்டோ பேக் அப் எடுக்கும் வகையில் செட் செய்திடலாம்.


3. எக்ஸ்டெர்னல் டிரைவ் என்றால் அதனை இணைக்கும்போதே ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் சோதனை செய்திடும் படி அமைக்கலாம். இதே போல பல செயல்பாடுகளை செட் செய்திடலாம்.

யு.எஸ்.பி.யில் இணைத்த சாதனம் எந்நிலையில் உள்ளது என்று அறிய பல்வேறு ஐகான்கள் காட்டப்படுகின்றன. இணைக்கப்பட்டுள்ள சாதனங்கள் அனைத்தும் இயக்கத்தில் உள்ளனவா என்று காட்டப்படும். போர்ட்டில் சாதனங்களே இல்லை என்றாலும் ஐகான் மூலம் தெரிந்து கொள்ளலாம். இணைக்கப்பட்ட ஒரு சாதனத்தின் இயக்கம் நிறுத்தப்பட்ட பின்னர் அது நீக்கப்படவில்லை என்றால் காட்டப்படும். இதன் பயன்பாடுகள் குறித்து மேலும் அறிய மேலே தரப்பட்டுள்ள இணைய தளத்தினையே காணவும்.

கணணித் திரையின் இடத்தை அதிகரிக்கும் Cube Desktop

Cube Desktop ஆனது ஒன்றுக்கு மேற்பட்ட virtual desktop க்களை முப்பரிமான (3D) முறையில் உருவாக்கக் கூடிய ஒரு மென்பொருளாகும். இதன் முலம் நமது கணணியில் ஆறு desktop க்களை உருவாக்கிக் கொள்ள முடியும் இதன் மூலம் கணணித் திரையில் பணிபுரியும் அளவைக் கூட்டிக் கொள்ள முடியும்.


இம் மென்பொருளை Install பண்ணியதும் ( கீழே உள்ள படத்தில் காட்டியவாறு ) Task bar இல் 1 2 3 4 5 6 என இலக்கமிடப்பட்டிடுக்கும். அந்த இலக்கத்தில் click செய்து குறிப்பிட்ட desktop க்கு செல்ல முடியும். இந்த மென்பொருளில் ஒவ்வொரு Desktop க்கும் விரும்பிய Wallpaper, Icon களைத் தனித்தனியாகப் போட்டு வைத்துக் கொள்ளலாம் என்பது இதன் சிறப்பாகும்.
விரும்பிய desktop இல் விரும்பிய Icon களைப் போட்டுக் கொள்வதற்கு படத்தில் காட்டியவாறு Task bar இல் வலப்புறத்தில் வரும் இம் மென்பொருளின் Icon இல் right click செய்து Utilities க்கு சென்று Manage Icons என்பதை click செய்வதன் மூலம் விரும்பிய desktop இல் விரும்பிய icon ஐப் போட்டுக் கொள்ளலாம்.

மற்றும் 3D Cube, Windows Exposer, 3D Desktop Explorer, 3D Desktop Flip, 3D Desktop Carousel, 3D Desktop Roll என்பதில் விரும்பியதை செய்வதன் மூலம் அசத்தலான 3D effects ஐ மாற்றிக் கொள்ள முடியும்

கணினியை ஒரே வினாடியில் ஷட்டவுன் (SHUTDOWN) செய்ய...


பொதுவாக கணினியில் உள்ள ஷட்டவுன் வசதியை பயன்படுத்தி அணைக்கும் பொழுது "Saving your settings" , "Windows is Shutting down" போன்ற செய்திகள் வரும்.சில நிமிடங்களுக்கு பின்னர் தான் கணினி அணைக்கப்படும்.


இதெல்லாம் மைக்ரோசாப்ட் நிறுவனம் செய்யும் கண்கவர் வித்தைகள் தான் . கணினியை அணைக்க சில வினாடியே போதுமானது . இந்த கண்கவர் வித்தைகளை பார்க்க விரும்பாதவர்கள் கீழ்க்கண்ட முறையை பயன்படுத்தி ஒரு சில வினாடியில் கணினியை அணைக்கலாம் . எந்த சேதமும் ஏற்படாது.

உங்கள் கணினியின் Task Manager ரை திறந்து கொள்ளுங்கள். ( Ctrl + Alt + Delete விசைகளை சேர்த்து அழுத்தினால் Task Manager திரைக்கு வரும் )

இந்த Task Manager ல் உள்ள மெனுவில் Shut Down ல் உள்ள Turn Off என்பதை Ctrl கீயை அழுத்திக்கொண்டே கிளிக் செய்யுங்கள் .
வினாடியில் கணினி அணைந்து விடும்.