எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்...புது,பொலிவுடன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது.

Wednesday, September 16, 2009

புளி உப்புமா

தேவையான பொருட்கள்:

தொகுதி 1

எண்ணெய்- 1 டீஸ்பூன்

கடுகு- 1/2 டீஸ்பூன்

உளுத்தம் பருப்பு- 1 டீஸ்பூன்

கடலைப் பருப்பு- 1 டீஸ்பூன்










தொகுதி 2

வெங்காயம்- 2

(பொடியாக அரிந்தது)

தொகுதி 3

அரிசி ரவா- 1 கப்

நீர்த்த புளிக் கரைசல்- 3 கப்

(எலுமிச்சை பழம் அளவு புளியில் கரைத்தது)

உப்பு- 1 1/2 டீஸ்பூன்

ஜவ்வரிசி (ஊறவைத்தது)- 1 டீஸ்பூன் (விருப்பபட்டால்)

தொகுதி 4

எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன்

கொத்தமல்லித் தழை- 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

மைக்ரொவேவ் பாத்திரத்தில் தொகுதி 1 ல் கொடுக்கபட்டுள்ள பொருட்களை எடுத்துக் கொண்டு பாதி மூடி மைக்ரொ ஹையில் 3 நிமிடங்கள் வைக்கவும்.

தொகுதி 2 ல் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களையும் சேர்த்து பாதி மூடி மைக்ரொ ஹையில் 3 நிமிடங்கள் வைக்கவும்.

தொகுதி 3 ல் கொடுக்கபட்டுள்ள பொருட்களையும் அத்தோடு நன்றாக கலக்கி மூடாமல் மைக்ரொ ஹையில் 3 நிமிடங்கள் வைக்கவும். மத்தியில் 2 முறை கலந்து விடவும்.

தொகுதி 4 ல் கொடுக்கபட்டுள்ள பொருட்களை கலந்து மூடாமல் மைக்ரொ ஹையில் 2 2 நிமிடங்கள் வைக்கவும்.

2 நிமிடங்கள் கழித்து பரிமாறவும்.

கிடைக்கும் அளவு: 4 நபருக்கு
         

No comments:

Post a Comment