எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்...புது,பொலிவுடன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது.

Wednesday, September 16, 2009

ஹைதராபாத் பிரியாணி

தேவையான பொருட்கள்: பாசுமதி அரிசி- 1 கப் தொகுதி 1 வெங்காயம்- 2 (நீளவாக்கில் அரிந்தது) உரித்த பூண்டு- 6 பல் எண்ணெய்- 1 டீஸ்பூன்
தொகுதி 2 சதுரங்களாக அரிந்த காய்கறிகளின் கலவை- 2 கப் (உருளை. கிழங்கு, காரட், பட்டாணி, பீன்ஸ், காலிப்ளவர் மற்றும் பல) தொகுதி 3 (அரைத்து கொள்ளவும்) முந்திரிப்பருப்பு- 10 சின்ன வெங்காயம்- 7 இஞ்சி- 1/2 அங்குலத் துண்டு ப.மிளகாய்- 6 (மேற்சொன்ன பொருட்களை வறுத்து 1 கட்டு கொத்தமல்லியுடன் சேர்த்து அரைக்கவும்) தொகுதி 4 (கலந்து வைக்கவும்) பட்டை- 1 அங்குலத் துண்டு இலவங்கம், ஏலக்காய்- தலா 2 கெட்டி தயிர்- 1 கப் (கடைந்தது) தண்ணீர்- 1 கப் உப்பு- 2 டீஸ்பூன் புதினா இலை, கொத்தமல்லிதழை- தேவையான அளவு (பொடியாக அரிந்தது) மற்ற பொருட்கள் எண்ணெய்- 2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சம் சாறு- 1 பழம் செய்முறை: அரிசியை கழுவி 10 நிமிடங்கள் ஊற வைக்கவும். மைக்ரொவேவ் பாத்திரத்தில் தொகுதி 1 ல் கொடுக்கபட்டுள்ள பொருட்களை கலந்து மூடி மைக்ரொ ஹையில் 4 நிமிடங்கள் வைக்கவும். தொகுதி 2 ல் கொடுத்துள்ள பொருட்களையும் கலந்து 2 டேபிள் ஸ்பூன் தண்ணீர் தெளித்து மூடி மைக்ரொ ஹையில் 5 நிமிடங்கள் வைக்கவும். மத்தியில் 1 முறை கலந்து விடவும். இதனுடன் தொகுதி 3 மற்றும் 4 ல் கொடுக்கபட்டுள்ள பொருட்களை கலந்து ஊறவைத்த அரிசியையும் சேர்த்து நன்றாக கலந்து மைக்ரொ ஹையில் 15 நிமிடங்கள் வைக்கவும். மூடியை கவனமாக திறந்து எண்ணெய் சேர்த்து மூடாமல் மைக்ரொ ஹையில் 2 நிமிடங்கள் வைக்கவும். எலுமிச்சை சாற்றை நன்றாக கலந்து 3 நிமிடம் கழித்து பரிமாறவும். கிடைக்கும் அளவு: 4 நபருக்கு.

No comments:

Post a Comment