எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்...புது,பொலிவுடன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது.

Wednesday, September 16, 2009

வீடியோ டவுன்லோடுகள் - எச்சரிக்கை தேவை

தற்போது ஆன்லைன் நேயர்களின் மிகச் சிறந்த பொழுதுபோக்கு யூ டியூப் உள்ளிட்ட பல இணையதளங்களிலிருந்து வீடியோ கிளிப்பிங்குகளை டவுன்லோடு செய்வதுதான். இதனால் கணினிகளின் பாதுகாப்பிற்கு பல ஆபத்துகள் நேர்வதாக கணினி பாதுகாப்பு ஆய்வு அறிக்கை ஒன்று எச்சரிக்கை விடுத்துள்ளது.


யூ டியூப் மற்றும் பிற நட்புறவு இணையதளங்களில் ஏகப்பட்ட வீடியோக்கள் உள்ளன. அவற்றை பார்த்து ரசிப்பது மற்றும் டவுன்லோடு செய்து நண்பர்களுக்கு அனுப்புவது என்பது ஆன்லைன் நேயர்களிடையே தற்போது பிரபலமடைந்து வரும் பழக்க வழக்கம். உரை ரீதியிலான பொருளடக்கங்களை விட வீடியோ கிளிப்பிங்குகளை பார்ப்பது, டவுன்லோடு செய்வது, அவற்றை பல நண்பர்களுக்கு அனுப்புவது தினசரி நடவடிக்கையாகிவிட்டது.

ஆனால் இவற்றை டவுன்லோடு செய்யும்போது வைரஸ் கிருமி சமிக்ஞை உள்ள குறியீடையும் நாம் சேர்த்தே டவுன்லோடு செய்து விடுகிறோம் என்று கூறுகிறது அந்த ஆய்வறிக்கை. இந்த வைரஸ் சமிக்ஞை உங்கள் கணிகளை அதன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருகிறது. உங்கள் நிதி நிலைமை, வங்கிக் கணக்கு, உங்கள் ஆன்லைன் வங்கி மற்றும் நிதி நடவடிக்கைகள் குறித்த தகவல்களை அப்படியே திருடிச் செல்கிறது.

ஜியார்ஜியா தொழில்நுட்ப தகவல் நிறுவனம் இது குறித்து கூறுகையில், தற்போதைய வெப் 2.0 தொழில்நுட்பம் பல்வேறு வகையான டவுன் லோடுகளுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது, இதன் மூலம் பயனாளர் அனுபவம் விரிவடைகிறது எனினும் திருட்டு சமிக்ஞைகளையும் சேர்த்தே நாம் டவுன்லோடு செய்வதும் நடக்கிறது என்று எச்சரித்துள்ளது.

ஃபிளாஷ் மீடியா ஃபைல் ஃபார்மேட்டுகள் அதிக பிரபலமடைந்து வரும் இக்காலக் கட்டங்களில், ஒரு மீடியா ஃபைலை டவுன்லோடு செய்யும்போதே ஹேக்கர்களிடம் கணினிகளை ஒப்படைப்பதும் நடைபெறுகிறது.

இணைய தள பயனாளர்களின் தினசரி ஆன்லைன் நடவடிக்கைகளில் மோசடி நிபுணர்களின் போலி இணைப்புகளும் நுழைந்து கொண்டிருக்கிறது. யூ டியூப் வீடியோ ஒன்றில் அல்லது இன்ஸ்டன்ட் மெசேஜிங் ஸ்ட்ரிங்கின் முடிவில், எக்செல் ஸ்ப்ரெட் ஷீட்டில் என்று ஹேக்கர்கள் மோசடி இணைப்புகளை வைத்திருப்பார்கள் என்று செக்யூர் கம்ப்யூடிங் நிறுவனத்தின் மூத்த அதிகாரி பால் ஜட்ஜ் என்பவர் கூறியுள்ளார்

No comments:

Post a Comment