எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்...புது,பொலிவுடன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது.

Tuesday, October 19, 2010

பரணி

பரணி - மிகவும் அமைதியான பெயரையும், குணத்தையும் கொண்டவர்... இவரின் எழுத்து மட்டுமே பல சமயங்களில் பேசும் எங்கள் TN6 -இன் அறையில். இப்பொழுதும் ரூம் ல id லாம் ஏத்தி ஏதோ சோதனை செய்றேன் என்று கூறுகிறார், ஆனால் இதுவரை அவர் மைக்-ல பேசி கூட யாரும் கேட்டு இருக்க மாட்டாங்க. ஏன் எதுக்குனே தெரியாமல், எப்பா பார்த்தாலும் ரூம் ல சிரிச்சுகிட்டே இருபார். கேம் நடந்தால் உடனடியா இடத்தை காலி செய்வதில் இவருக்கு நிகர் யாரும் இல்லை. இவர் எத்தன id ல வந்தாலும், இவரது வண்ணத்து பூச்சி (lll_x _vannathu _poochi _x_lll) id மிக பிரமாதமாக இருக்கும். பரணி, பரணி ஆழ்வாரா????? பொறுத்திருந்து பார்போம்.....

Tuesday, October 12, 2010

புதுப் பொலிவுடன் வெளிவந்துள்ள facebook group

facebook இணைய தளத்தில் அன்றாடம் பல விடயங்களை எமது நண்பர்களுடன் பகிர்ந்து கொண்டு வருகின்றோம். இப்படி நாம் ஒருவிடயத்தை பகிரும் போது அது எமது அனைத்து நண்பர்களும் பார்த்து வந்தார்கள். அந்தப் பகிர்தலில் பல குறைபாடுகள், ப்ரைவசி பிரச்சினைகள் காணப்படுவதாக பலரும் முறைப்பாடுகளை மேற்கொண்டுவந்தார்கள். அதற்கு பதிலழிக்கும் வகையில் இந்த புதிய Groups வெளிவந்துள்ளது. இப்போது உங்கள் குடும்ப photo வை உங்களது உறவினர்கள் மட்டும் பார்க்கும் வகையில் பகிர்ந்து கொள்ளலாம். இப்போது ஒரு இணைய தள முகவரியினை உங்கள் நெருங்கிய நண்பர்களிடையே மட்டும் பகிரலாம். மேலும் நாங்கள் குழுவாக சேர்ந்து chat ம் பண்ணலாம். உங்கள் நண்பர்களிடையே குழுக்களை உருவாக்கி எமது தனிப்பட்ட விடயங்களை பாதுகாப்பாக பகிர்ந்து கொள்ளும் வாய்ப்பினை இந்த புதிய Groups தந்துள்ளது. பலரும் எதிர்பார்த்த ப்ரைவசி இங்கு அதிகமாகவே காணப்படுகிறது. நான் சொல்வதைவிட நீங்கள் செய்து பார்க்கும் போது இலகுவாக புரியக்கூடியதாக இருக்கும். இப்போதோ உங்கள் நண்பர்களிடையே ஒரு குழுவினை (group)உருவாக்கி பயன்படுத்திப்பாருங்கள்.

Monday, October 4, 2010

எச்சரிக்கை : facebook “Like” இனூடாக வரும் வைரஸ்

facebook இணைய தளத்தில் காணப்படும் “Like” பட்டனினூடாக வைரஸ் ஒன்று பரப்பப்பட்டு வருகின்றதாம். Javascript ன் துணையுடனேயே இது செயற்பட்டுவருகின்றது. “Shocking! This girl killed herself after her dad posted this photo.” இந்த வாசகத்துடைனையே இந்த வைரஸ் பரவி வருகிறது. “Shocking! This girl killed herself after her dad posted this photo.” எனும் வாசகத்தை click செய்யும் போது தானகவே குறிப்பிட்ட இந்த வாசகத்தை ‘Like’ செய்து உங்கள் ‘wall’ இலும் இந்த வாசகத்தை போட்டுவிடும். இவ்வாறு பல்லாயிரக்கணக்கான facebook பயனாளர்களை தொல்லை செய்துவருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. மேற்குறிப்பிட்ட வாசகத்துடன் ஏதேனும் வந்தால் ,அதனை click செய்ய வேண்டாம்