எமது உத்தியோகபூர்வ வலைப்பதிவிற்கு வருகை தந்த உங்களை அன்புடன் வரவேற்கின்றேன்...புது,பொலிவுடன் இணையத்தளம் உங்களை நாடி வருகிறது.

Friday, October 30, 2009

இன்றைய சிந்தனைக்கு

உனக்கு உதவி செய்தவரை மறக்காதே.உன்னை விரும்புபவரை வெறுக்காதே.உன்னை நம்பியவரை ஏமாற்றாதே.

Sona

சோனா தன் பெயருக்கு ஏற்றாற் போல் தன் குணத்திலும் இவர் தங்கம் தான். குறிகிய காலத்தில் எல்லொர் மனதையும் தன் வச படுத்திக்கொள்ளும் ஆற்றல் படைத்தவர். எல்லா விஷயங்களிளும் பொறுமை பொறுமை என்ற தாரக மந்திரத்தை கடை பிடிப்பவர். மிக குறுகிய காலமே MIC பிடித்து பேச கூடியவர் அப்படியே MIC பிடித்தாலும் பல நேரங்களில் காற்று பாஷையில் மட்டுமே பேசுபவர். இவர் பேசும் காற்று பாஷை நண்பர்களாகிய எங்களுக்கு மட்டுமெ புரியும். புதியவர்கள் பலருக்கு புரியாத ரகசிய பாஷை பேசுவாள் எங்கள் தங்க தோழி சோனா.

Shhhuhhh77

ஸ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் இவரின் ID மட்டும்தான் இப்படி ஆனால் இவர் பேச்சு

ஒரு மடை திறந்த வெள்ளம் போலதான் இருக்கும். அந்த வெள்ளத்தில் அன்பு பாசம் கண்டிப்பு எல்லாமும் கலந்து இருக்கும். இவர் நண்பர்கள் புதியவர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் எல்லோரிடத்திலும் சகஜமாக பேசி பழகும் ஒரு நல்ல உள்ளம். எங்கள் அன்பு தோழி. மற்றவர்களுக்கு உபதேசிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர். மருத்துவ துறையில் இருக்கும் இவர் அந்த துறைக்கு தேவையான பல நல்ல குணங்களை தன்னுள் புதைத்து வைத்துள்ளார்.

Thursday, October 29, 2009

SWEET ANGEL

இவள் தன் பெயருக்கேத்தது போல் இனிமையான தோழி ஆவள் அதே சமயம் தன் நண்பர்களை கண்டிப்பதில் இனிமையான ராக்க்ஷசியும் ஆவாள்

சாதாரனமாக இவள் பேச மாட்டாள் ஆனால் பேச ஆரம்பித்தால் அவ்வளவு எளிதில் பேச்சை நிறுத்தவும் மாட்டால்

எங்கள் அறைக்கு வரும் நண்பர்களை உறவு முறை வைத்து (அக்கா, மாமா, அண்ணா, தங்கச்சி என்பது போல்)அழைப்பதில் இவளுக்கே முதல் இடம்.இந்த விஷயத்தில் இவளுக்கு நிகர் இவளே

llllll_number_id_llllll

இப்ரஹிம் இவரை பற்றி சொல்ல வேண்டுமானால் இவர் தயிரியமான ஒரு பயந்த சுபாவம் உடையவர். எங்கள் அறையில் ஏதாவது Game என்றால் தயிரியமாக மைக் பிடித்து திட்டுவார் அதே சமயத்தில் Game பெறிதாவது போல் தோன்றினால் உடனே அமைதி ஆகி விடுவார். இவர் எல்லோரையும் உறவு முறை (அக்கா, மாமா, அண்ணா, தங்கச்சி என்பது போல்) வைத்து அழைப்பதில் இரண்டாம் இடத்தை பிடிப்பவர். மற்றபடி சொல்ல வேண்டுமானால் மிகவும் நகைச்சுவை உணர்வு கொண்ட நன்பர்.

Wednesday, October 28, 2009

நார்சத்து, கீரைகள் அவசியம்

நார்ச்சத்து உள்ள உணவுகள் பெருங்குடலில் புற்று நோய் வராமல் தடுக்கும். கோதுமை, சோளம், கேழ்வரகு, கம்பு முதலியன நார்ச்சத்துள்ள உணவுப் பொருட்களில் அடங்கும். கீரைகளில் கால்சியம், சோடியம், க்ளோரைன் எனப்படும் உலோகச்சத்து அதிகம் உண்டு.


கீரையில் சக்கரை கிடையாது ஆகவே நீரிழவு நோயாளிகளுக்கும் இது உகந்தது. பூண்டும் மிகவும் நல்லது.

கூடிய வரையில் ஆரோக்கிய உணவுப்பழக்கம் மேற்கொள்ளுதல் வியாதிகளை வர விடாமல் தடுக்கும். 

வியாதி வந்த பின் அதற்கேற்ற உணவுகளை கட்டுப்பாட்டுடன் சாப்பிடுவதைக் காட்டிலும், வருவதற்கு முன் ஆரோக்கியமான உணவுகளை உண்பதே சிறந்தது.

இழப்பு...

உனக்காக அனைத்தையும் இழந்தேன்
ஆனால்
நீ யாருக்காக என்னை இழந்தாய்?

நினைவு...



உன்னை மறக்க நினைத்தால் கூட

உன்னையே நினைக்க வேண்டி இருக்கிறது
இது தான் அன்பா

Saturday, October 10, 2009

இன்றைய சிந்தனைக்கு

உலகத்திற்கு வேண்டுமென்றால் நீங்கள் ஒரு ஆளாக இருக்கலாம்; ஆனால் யாராவது ஒருவருக்கு. நீங்களே உலகமாக இருக்கலாம்

Thursday, October 8, 2009

நட்பு


நண்பர்கள் பிறந்த நாளை

மறப்பது தவறு இல்லை
நண்பர்களுடன் இருந்த நாட்களை
மறந்து விடுவது தான் தவறு

வருத்தம்


பூ வாங்கி தரவில்லையே என்ற

வருத்தம் உனக்கு - நீ
நேசித்த பூக்கள் பூக்கவில்லையே
 என்ற வருத்தம் எனக்கு ...

அறியா மானிடரே


நட்பிற்க்கும், காதலிற்கும் வேறுபாடு

அறியாத மானிடரே கேளீர்
நட்பு என்பது இரு மனங்களின் சேர்க்கை
காதல் என்பது இரு உயிர்களின் சேர்க்கை
பிரிந்த நட்பு பல பசுமையான உணர்வுகள் சொல்லும்

பிரிந்த காதல் பலரை மடித்துச்செல்லும்
நட்பின் வழியில் காதல்வரின் அது போலி
காதலின் வழியில் நட்புவரின் அது விதி

நான் அறியா என் தோழன்!


விழி நோக்கி சிரித்த
தோழன் இல்லை....
அருகில் அமர்ந்து
தேற்றியவனும் இல்லை...
ஆபத்தில் வந்து
உதவியவனும் இல்லை..
கேளியாய் என்னை
வாய் பேசி சண்டை
போட்டவனும் இல்லை...
நீ யாரென்று நான்
அறியவும் இல்லை...
உன்னிடம் பகிராத
விசயங்கள் இல்லை...
இருப்பினும்
இப் பிரபஞ்சத்தில் நான்
நட்பு கொள்ள உன்னைத் தவிர
யாரும் இல்லை................

Saturday, October 3, 2009

எங்கே..



வசித்த நாடு எங்கே...
விரித்த பாய் எங்கே..
தெலைந்த வசந்தம் எங்கே..
துடிப்பான ரத்தம் எங்கே..
தேடிய சொந்தம் எங்கே..
தொலைந்து போன சொர்க்கம் எங்கே..
இதமான நட்பு எங்கே..
அன்புள்ள இதயம் எங்கே..
இனிமை தந்த குரல் எங்கே..
வசந்தம் தந்த பாடல் எங்கே..
இப்போ….நீ…..தான் எங்கே....?

எப்படி சொன்னாய்




 தோழி நலம் விசாரித்த போது

  நலமாய் இருக்கிறேன் என்று
 எப்படி சொன்னாய் - என்னை
 நீ பிரிந்து சென்ற பின்பும் கூட....

இமைக‌ள்

                                                         
     விழிக்கும் ச‌க்தி இல்லை என்றால்   இமைக‌ள் கூட‌ இடம்பெயர்ந்து செல்லும்

Thursday, October 1, 2009

கனவு


       
 கனவு காண யாரும்
     உறங்கப் போவதில்லை
நான் மட்டும்தான்
பகல் கனவு கண்டு
கொண்டு இருக்கிறேன்
நான் தூங்குவதாக

வாழ்க்கை


 
வாழ்க்கை ஒரு
பட்டாம்பூச்சி மாதிரி.......

லேசா பிடிச்சா

பறந்து விடும்!

இறுக்கி பிடிச்சா

இறந்து விடும்